வங்காளதேச டி20 கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகளில் விளையாடுகிறது

இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன், ஷிபம் டுபே, ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்திய தொடரில் சொந்த காரணங்களால் தமிம் இக்பால் பங்கேற்க மாட்டார். தமிம் இக்பாலுக்கு பதிலாக மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார்  என வங்காள தேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியா வரும் வங்கதேச அணி 3 டி-20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் திடீரென 11 அம்ப கோரிக்கையை நிறைவேற்றும் வரை எந்த போட்டிகளிலும் பங்கேற்கபோவதில்லை என வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்கள் போராட்டம் அறிவித்து சுமார் 2 நாட்களுக்கு பின் தங்களின் ஸ்டிரைக்கை வாபஸ் பெறுவதாக வங்கதேச வீரர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நாளை முதல் மீண்டும் அவர்கள் வழக்கம் போல போட்டிகளில் பங்கேற்பார்கள் என தெரிகிறது.

இதனால் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் திட்டமிட்டது போல நடக்கும் என தெரிகிறது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக வங்கதேச கிரிக்கெட் போர்டு தலைவர் நஜ்முல் ஹசன் தெரிவித்துள்ளார் ஏற்கதக்க வகையில் தான் இருந்தது

இதுகுறித்து ஹசன் கூறுகையில், ‘வங்கதேச கிரிக்கெட் வீரர்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்களின் பேச்சுவார்த்தை வருகைக்கு ந் நன்றி தெரிவித்தோம். அவர்களின் பெரும்பாலான கோரிக்கை ஏற்கதக்க வகையில் தான் இருந்தது.

அதில் ஒரு சில கோரிக்கைகளை வங்கதேச கிரிக்கெட் போர்டு செயல்படுத்த முடியாது. அவர்களின் 11 கோரிக்கையில் 9 நிறைவேற்ற முடியும் என்பதை உறுதியாக சொல்ல முடியும்.’ என்றார். இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து வங்காளதேச அதிரடி ஆட்டக்காரர் தமிம் இக்பால் விலகியுள்ளார். அவரது மனைவிக்கு அடுத்த வாரத்தில் இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளது. மனைவியை அருகில் இருந்து கவனிப்பதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். அணியில் தமிம் இக்பாலுக்கு பதிலாக இம்ருல் கேயஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா- வங்கதேச தொடர் அட்டவணை:

டி-20 தொடர்:

நவம்பர் 3, 2019 முதல் டி-20, டெல்லி

நவம்பர் 7, 2019 இரண்டாவது டி-20, ராஜ்கோட்

நவம்பர் 10, 2019 மூன்றாவது டி-20, நாக்பூர்

டெஸ்ட் தொடர்:

நவம்பர் 14 – 18 முதல் டெஸ்ட், இந்தூர்

நவம்பர் 22 – 26 இரண்டாவது டெஸ்ட், கொல்கத்தா

Be the first to comment on "வங்காளதேச டி20 கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகளில் விளையாடுகிறது"

Leave a comment

Your email address will not be published.


*