வங்காளதேசம் தொடரில் ரோஹித் தலைமை தாங்கும் இந்தியா அணி

வங்காளதேச டி20 கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடர் அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்குகிறது.

இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சாம்சன், ஷிபம் டுபே, தாகூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டெஸ்ட் போட்டிகள் முறையே இந்தூர் (நவ.14-18), கொல்கத்தா (நவ.22-26) ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடராகும்.

வங்காளதேச தொடருக்கான இந்திய அணியை எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு கமிட்டியினர் மும்பையில் நேற்று கூடி ஆலோசித்து அறிவித்தனர்.

தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருவதால் கேப்டன் விராட் கோலிக்கு அவரது விருப்பத்தின் பேரில் வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரோகித் சர்மா அணியை வழிநடத்துவார். உடல்தகுதி காரணமாக வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனிக்கு இடம் கிடைக்கவில்லை.

முதுகில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்து ஓய்வில் இருக்கும் ஹர்திக் பாண்ட்யாவின் இடத்தை நிரப்புவதற்காக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் மும்பையைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் 26 வயதான ஷிவம் துபே முதல் முறையாக அழைக்கப்பட்டுள்ளார். விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் கர்நாடகாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஷிவம் துபே 67 பந்துகளில் 7 பவுண்டரி, 10 சிக்சருடன் 118 ரன்கள் விளாசியதும், கடந்த ஆண்டு ரஞ்சி கிரிக்கெட்டில் பரோடாவுக்கு எதிராக ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்சர்கள் நொறுக்கியதும் குறிப்பிடத்தக்கது.

அணித் தேர்வுக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் தேர்வு குழுவினரிடமும், இந்திய கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருடனும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பில் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பங்கேற்கவில்லை.


இந்திய 20 ஓவர் அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், குருணல் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், ராகுல் சாஹர், தீபக் சாஹர், கலீல் அகமது, ஷிவம் துபே, ஷர்துல் தாகூர்.

டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, விருத்திமான் சஹா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், குல்தீப், ஷமி, உமேஷ், ஷர்மா, சுப்மான் கில், ரிஷாப்.

Be the first to comment on "வங்காளதேசம் தொடரில் ரோஹித் தலைமை தாங்கும் இந்தியா அணி"

Leave a comment

Your email address will not be published.


*