வங்கதேசம் செல்லும் இந்திய அணி, 6 வருசத்தில் முதல்முறை…வெளியானது தகவல்!

இந்திய அணி வங்கதேச சுற்றுப் பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கவுள்ளது. 2014, 2015ஆம் ஆண்டுகளில் இந்திய அணி வங்கதேசம் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடியது. அதன்பிறகு வங்கதேசம் செல்லவில்லை. தற்போது, 6 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணி அங்குச் செல்லவுள்ளது.

இதுகுறித்த முக்கியத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வங்கதேச அணி 2021 முதல் 2023ஆம் ஆண்டுவரையிலான தொலைக்காட்சி உரிமத்தை ஏலம் விட்டது. அப்போது இந்த காலகட்டத்தில் எந்தெந்த அணி வங்கதேசம் வந்து கிரிக்கெட் விளையாடும் என்ற பட்டியலும் வெளியானது. அதில், இந்திய அணி 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம், வங்கதேசம் சுற்றுப் பணயம் மேற்கொண்டு 2 டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால், இந்திய அணி 6 வருடங்களுக்குப் பிறகு வங்கதேசம் செல்லவுள்ளது உறுதியாகியுள்ளது.

இந்திய அணி கடைசியாக 2015ஆம் ஆண்டு வங்கதேசம் சென்றபோது ஒரு டெஸ்ட், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிரா ஆனது.

வங்கதேச அணி கடைசியாக 2019ஆம் ஆண்டு இந்தியச் சுற்றுப் பயணத்தில் பங்கேற்று இரண்டு டெஸ்ட், மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடியது. இரண்டு டெஸ்ட் போட்டிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக இந்தூர் மற்றும் கொல்கத்தாவில் நடைபெற்றது.

தற்போது வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் 2021 முதல் 2023ஆம் ஆண்டு வரை இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் போன்ற அணிகள் இங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கவுள்ளது. உலகக் கோப்பை டி20 தொடர் துவங்குவதற்கு முன்பு இங்கிலாந்து அணி வங்கதேசம் சென்று டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2021 மற்றும் 2023 க்கு இடையில் நடைபெறவிருக்கும் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமையை பி.சி.பி விற்றுள்ளது. இந்த ஆண்டிலேயே, பங்களாதேஷில் ஒரு சில பெரிய தொடர்கள் உள்ளன ’. ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் தொடரில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார், அதன் அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. இவ்வளவு காலத்திற்குப் பிறகு தங்கள் நாட்டில் விளையாட நிறைய இருப்பதால் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் வழக்கத்தை விட மகிழ்ச்சியாக இருப்பார்கள். பங்களாதேஷ் ரசிகர்கள் தங்கள் அணி தங்கள் நாட்டில் விளையாடுவதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Be the first to comment on "வங்கதேசம் செல்லும் இந்திய அணி, 6 வருசத்தில் முதல்முறை…வெளியானது தகவல்!"

Leave a comment

Your email address will not be published.


*