லிஸ்டால் செம கோபம்.. கோலியை கடுமையாக சீண்டிய பர்தீவ் பட்டேல்.. கடைசியில் பார்த்தா இப்படி ஆகிடுச்சு!

2021 ஐபிஎல் தொடர் வரும் மே மாதம் நடக்க உள்ளது. இதற்காக பிப்ரவரி 11ம் தேதி ஏலத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ரீடெயின் லிஸ்டை நேற்று ஐபிஎல் அணிகள் வெளியிட்டது.இந்த நிலையில் பெங்களூர் அணியில் இருந்து 9 வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.ஆரோன் பின்ச், உமேஷ் யாதவ், மெயின் அலி , சிவம் துபே, கிறிஸ் மோரிஸ், டெல் ஸ்டெயின், உடானா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வீரர்கள் அதிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.ஆர்சிபி அணியில் தற்போது விராட் கோலி, ஏ பிடி வில்லியர்ஸ், சாஹல், தேவ்தத் படிகள், வாஷிங்க்டன் சுந்தர், முகமது சிராஜ், நவ்தீப் சைனி , ஆடம் சாம்பா, எஸ் அஹமது , ஜோஸ் ப்ளிப், கே ரிச்சர்ட்ஸன், தேஷ் பாண்டே ஆகியோர் ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர் .இந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடருக்காக பெங்களூர் அணி வெளியிட்ட ரிலீஸ் லிஸ்ட் ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் பர்தீவ் பட்டேலை கடுமையாக கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. பெங்களூர் அணியால் தான் ரிலீஸ் செய்யப்பட்டதை பார்த்து கோபம் அடைந்துள்ளார். நான் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டேன், என்னை போய் ரிலீஸ் செய்துள்ளனர், ரொம்ப நன்றி என்று கிண்டலாக கூறி ஆர்சிபி அணியை வம்பிழுத்து உள்ளார்.அதாவது ஆர்சிபி அணி தன்னை அவமானப்படுத்திவிட்டதாக பட்டேல் கூறியுள்ளார். ஆனால் ஆர்சிபி அணி தனது ரிலீஸ் லிஸ்டில் பட்டேல் பெயரை சேர்க்கவில்லை. அவர்களின் இணைய பக்கத்தில் மட்டும் பர்தீவ் பட்டேல் ஓய்வு பெற்றுவிட்டார், அதனால் அவரை ரிலீஸ் செய்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதை பெரிய விஷயமாக நினைத்து பட்டேல் கோபம் அடைந்துள்ளார்.அதிலும் வாட்சன், மலிங்கா போன்ற ஓய்வு பெற்ற வீரர்களை கூட அந்தந்த அணிகள் ரிலீஸ் செய்துள்ளது. அப்படி இருக்கும் போது பர்தீவ் பட்டேல் கோபம் அடைவது நியாயம் இல்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பர்தீவ் பட்டேல் கடந்த சில தினங்களுக்கு ஓய்வு பெற்றார். அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக பர்தீவ் பட்டேல் அறிவித்துள்ளார்.இவர் ஓய்வு பெற்ற சில நிமிடத்தில் தனது ஆர்சிபி அணியின் கேப்டன் கோலிக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.ரோஹித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று பர்தீவ் பட்டேல் குறிப்பிட்டு இருந்தார். அதோடு மும்பை அணியிலும் நிர்வாக பணியில் இணைந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் பெங்களூர் அணியிடம் மோதியுள்ளார்.

Be the first to comment on "லிஸ்டால் செம கோபம்.. கோலியை கடுமையாக சீண்டிய பர்தீவ் பட்டேல்.. கடைசியில் பார்த்தா இப்படி ஆகிடுச்சு!"

Leave a comment

Your email address will not be published.


*