லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரங்கள் கடுமையாக சாடியுள்ளனர்

www.indcricketnews.com-indian-cricket-news-10097

டெல்லி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் எலிமினேட்டர் சுற்றில், 208 ரன்கள் என்ற இலக்கை கே.எல்.ராகுல் வெற்றிக்கரமாக துரத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பெரிய ஷாட்களை ஆடத்தெரிந்த ராகுல் வழக்கம்போல நிதானமாக விளையாடி தனது தனிப்பட்ட ஸ்கோரை மட்டும் உயர்த்தி, முக்கிய கட்டத்தில் ஆட்டமிழந்து லக்னோ ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். 200 ரன்களுக்கு மேல் இலக்கு இருக்கும்போது தொடக்க ஆட்டக்காரர்கள் தான் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்திருக்க வேண்டும். இருப்பினும் ராகுல் 43 பந்துகளில் தான் அரைசதமே அடித்தார்.

ஆனால் ரஜத் படிதர் 54 பந்துகளில் 112 ரன்கள் விளாசி இருந்தார். கே.எல்.ராகுல் படிதரை விட நான்கு பந்துகளை அதிகமாக விளையாடி 33 ரன்கள் குறைவாக எடுத்தார். இது ஒரு கடுமையான ஒப்பீடு மட்டுமல்ல அநியாயமாய் கூட. ஏனெனில், 400 ரன்கள் எடுத்த நாக் அவுட் டி20 போட்டியில், இரு தரப்பிலும் டாப் ஸ்கோரர்களுக்கு இடையேயான ஸ்ட்ரைக் ரேட்டில் உள்ள அப்பட்டமான வித்தியாசம் போட்டியின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி. அது இப்போட்டியில் நடந்தது.

இந்நிலையில் லக்னோ அணியின் தோல்விக்குக் காரணம் குறித்து முன்னாள் இந்திய தலைமைப்பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில்,”ராகுல் தீபக் ஹூடாவுடன் பேட்டிங் செய்யும் போது 9-14வது ஓவருக்கு இடையில் அதிக ரிஸ்க் எடுத்திருக்க வேண்டும்.குறிப்பாக மிடில் ஓவர்களில் சிறப்பாக ஆடி இன்னும் கொஞ்சம் வாய்ப்புகளைப் பெற்றிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். அதுமட்டுமின்றி அவர்கள் விளையாடும்போது தேவையான விகிதத்தைக் குறைத்திருந்தால்,பெங்களூர் அணியை கொஞ்சம் பதட்டப்படுத்தியிருக்கும்” இவ்வாறு ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் கூறினார்.

மேலும் இதுகுறித்து முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் கணேஷ் கூறுகையில், “லக்னோ அணியின் மிடில் ஓவர்களில் ராகுலின் பேட்டிங் புரியவில்லை.ஏனெனில் ரஜத் படிதார்:54 பந்துகளில் 112. கே.எல்.ராகுல்:58 பந்துகளில் 79. இந்த இரண்டு மாறுபட்ட இன்னிங்ஸ் தான் ஆட்டத்தின் தலைவிதியைத் தீர்மானித்தது. ஆனால் மிடில் ஓவர்களில் ராகுல் 1 மற்றும் 2 ரன்களை மட்டுமே எடுத்தார் என்பது ஏன் என்று எனக்கு சரியாகப் புரியவில்லை. அவருக்கு விளையாடத் தெரிந்தும்,அதை விளையாட விரும்பவில்லை?” இவ்வாறு ட்வீட் செய்தார்.

இந்நிலையில் கேப்டன் கே.எல்.ராகுல் இதுகுறித்து கூறுகையில்,”இந்தப் போட்டியில் நாங்கள் நிறைய தவறு செய்துவிட்டோம். களத்தில் நாங்கள் எங்களையே கைவிட்டுவிட்டோம்.நாங்கள் வெற்றி பெறாததற்கான காரணங்கள் மிகவும் தெளிவாக இருப்பதாக நான் நினைக்கிறேன். எங்கள் இரு அணிக்கும் உள்ள ஒரேயொரு வித்தியாசம் ரஜித் படிதரின் ஆட்டம் தான்.  இருப்பினும் முதல் நான்கு இடங்களுக்குள் இடம் பிடித்ததில் மகிழ்ச்சி. நாங்கள் புதிய அணி, அணியில் இருக்கும் வீரர்களுக்கு சராசரி வயதே 25 தான். இதில் சிலர், அவ்வப்போது சில போட்டியில் நன்றாக விளையாடினர். குறிப்பாக மோஹ்சின் கான் ஒரு சிறந்த பவுலர் என்பதை அனைவருக்கும் காட்டியுள்ளார். அடுத்த சீசனில் இன்னும் பலமான பந்துவீச்சாளராக வருவார் என நம்புகிறேன்” இவ்வாறு ராகுல் கூறினார்.

Be the first to comment on "லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரங்கள் கடுமையாக சாடியுள்ளனர்"

Leave a comment

Your email address will not be published.


*