ரோஹித் ஷர்மா அல்லது வேறு யாருடைய தலைமையின்கீழ் இருந்தாலும் விராட் கோலி ரன் குவிப்பார் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-049

நியூ டெல்லி: அகமதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று (பிப்:6) நடைபெற்ற மேற்கிந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதில் முதல் இரண்டு பந்துகளை தொடர்ந்து பவுண்டரிக்கு விளாசிய கோஹ்லி, அதே ஓவரில் அல்ஸாரி ஜோசப் வீசிய பவுன்சர் பந்தை ஹுக் ஷாட் அடிக்க முற்பட்டபோது, பேட்டின் நுணியில் எட்ஜாகி டீப் அவுட் ஆனார்.

இலக்கு குறைவாக இருந்தபோதும், தேவையில்லாமல் கோஹ்லி அதிரடி காட்ட முயன்றது விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் வெற்றிக்குப் பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸில் நடைபெற்ற விவாதத்தில் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் விராட் கோலி குறித்து கூறுகையில், “இனிவரும் போட்டியில் நிதானமாக விளையாடி கவனமாக பவுன்சர் பந்துகளை கோஹ்லி எதிர்கொள்ள வேண்டும்.கோஹ்லியின் உடல் மொழி மற்றும் அணுகுமுறை பற்றி நிறைய யூகங்கள் உள்ளன.

ஆனால் விராட் கோலி தரமான வீரர், ரோஹித் ஷர்மா அல்லது வேறு யாருடைய தலைமையின் கீழ் விளையாடினாலும்  இந்தியாவுக்காக அவர் ரன்களை குவிப்பார்” என்று கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் கோஹ்லி பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை என்றாலும்,  களத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டார். குறிப்பாக யுஸ்வேந்திர சாஹல் எடுத்த இரண்டு விக்கெட்டுக்கும் உதவிபுரிந்தார்.

 அதில் 20வது ஓவரில், மேற்கிந்திய கேப்டன் கீரன் பொல்லார்டுக்கு தவறான பந்து வீசுமாறு சாஹலை வழிநடத்தி, லெக்-ஸ்பின்னர் பொல்லார்டை கோல்டன் டக் அவுட்டாக்கி வெளியேற்றினார். அதேபோல 22வது ஓவரில், சாஹலின் பவுலிங்கில் ப்ரூக்ஸுக்கு அவுட் சைட் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் பந்து சென்றது. அந்தப்பந்தை ரிஷப் பண்ட் பிடித்துவிட்டார்.

இருப்பினும் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. ​​ஆனால் ரோஹித் ஷர்மாவிடம் சென்று விராட் கோலி கண்டிப்பாக டி.ஆர்.எஸ் எடுக்கலாம் என்று கூறினார். அந்த ஆலோசனையை ஏற்ற ரோஹித் ரிவியூ எடுத்தார். அது கேட்ச் என்பது உறுதியாகி அவுட் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விராட் கோலிக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் இடையேயான நட்புறவு குறித்து கேட்டபோது, “ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவருமே இந்தியாவிற்காகத்தான் விளையாடுகிறார்கள். 2 வீரர்களுக்கும் இடையே நல்லதொரு புரிதல் இல்லை. இருவீரர்களுக்கும் இடையே மோதல் என்பதெல்லாம் முழுக்க முழுக்க கற்பனைதான். கோஹ்லி-ரோஹித் இடையே மோதல் என்ற பேச்சு கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.

ஆனால் இருவருமே அதைபற்றி பெரிதாக கண்டுகொள்வதில்லை. ஏனென்றால் உண்மை என்னவென்று அவர்களுக்குத் தெரியும். அணியில் இருக்கும் ஒரு வீரர் தனக்கு கேப்டனாக வருவதை, எந்தவொரு கேப்டனும் விரும்புவதில்லை என்று பேசப்படுவது எல்லாம் முட்டாள்தனமானது. சிறப்பாக எதுவும் செய்ய முடியாதவர்கள் கதைகளை உருவாக்க முயற்சிக்கிறார்கள்” இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.