ருதுராஜ் கெய்க்வாட் ” நான் எதையும் எளிமையாக வைத்திருந்து ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்று மட்டுமே நினைப்பேன்” எனக் கூறியுள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-0059

டெல்லி: நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இந்திய அணி டி20ஐ மற்றும் டெஸ்ட் போட்டிகளை விளையாட உள்ளது.  ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் விளையாடி வந்த இளம் வீரர் 24 வயதான ருதுராஜ் கெய்க்வாட் 16 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

வரும் நவம்பர் 17-ம் தேதி முதல் தொடங்க உள்ள நியூசிலாந்துக்கு எதிரான டி20ஐ போட்டிகளில் தற்போது முதன் முறையாக விளையாட   கெய்க்வாட்க்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரராக எப்பொழுதும் களமிறங்கும்  கெய்க்வாட் இந்திய அணியில் விளையாடும் போது ஆட்டத்தில் தான் எத்தனையாவது ஆளாக களமிறங்கப் போகிறோம் என்பது குறித்து இதுவரை பெரிதாக யோசித்ததில்லை என்றே கூறியுள்ளார்.

கெய்க்வாட் இப்படி கூறியதற்கான காரணம் இந்த டி20-க்கான தொடரில் இந்திய அணியல் மொத்தம் 5 பேர் தொடக்க ஆட்டக்காரர்களாக உள்ளனர். இதுகுறித்து ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில், “எத்தனையாவது பேட்டராகக் களமிறங்கப் போகிறோம் என்பது குறித்து நான் யோசிக்கவில்லை. என்னுடைய கட்டுப்பாட்டில் என்ன இருக்கிறதோ அதன் மேல் மட்டுமே கவனம் செலுத்தி ஒரு நல்ல விளையாட்டு வீரராக எப்பொழுதும் என்னை தயார் செய்து கொள்வேன்.

பல வகையான நுணுக்கங்களை அடக்கி உள்ள போட்டிகளில் எனக்கான இடத்தைத் தக்க வைத்துக்கொண்டு எனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் நான் நன்றாக விளையாட வேண்டும் என்ற மனநிலையில் இருந்தே பழகி விட்டது. அதனால், நான் பெரிதாக யோசிக்கமால் விளையாட்டின் போது ஆட்டத்தை முடிக்க வேண்டும் எனறு மட்டுமே நினைப்பேன். மொத்தத்தில் நான் எதையும் எளிமையாக வைத்துக்கொள்ளவே எப்பொழுதும் விரும்புவேன். மைதானத்தில் எனது பேட்டிங்கை சூழல்களுக்குத் தகுந்தவாறு மாற்றிக்கொள்வேன்.

என்னுடைய சில ஆட்டங்களை நான் விளையாடும் போது தோனி என்னிடம் வந்து ஆட்டம் நமது கையில் இருக்கும் போது முயற்சி செய்து அதை முடிக்க வேண்டும் எனக் கூறுவார். ஒரு தொடக்க ஆட்டக்காரர் 10 அல்லது 12 ஓவர்கள் மட்டுமே விளையாட முடியும் என்பதல்ல.முழு ஆட்டத்தையும் தொடக்க வீரரால் முடிக்க முடியும் என தோனி கூறுவார். நான் இன்று மட்டுமல்ல அதை எப்போதும் பின்பற்றுவேன் என அவரிடம் சொன்னேன்” என்றார். மேலும் ஒரு ஆட்டத்தை

தொடங்குவதும் அதை முடிப்பதும் நாமாகத்தான் இருக்க வேண்டும் என தனக்கு தோனி கொடுத்த அட்வைஸ் தான் தன்னுடைய ஆட்டத்தின் நுணுக்கத்தை மேம்படுத்தி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "ருதுராஜ் கெய்க்வாட் ” நான் எதையும் எளிமையாக வைத்திருந்து ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்று மட்டுமே நினைப்பேன்” எனக் கூறியுள்ளார்."

Leave a comment

Your email address will not be published.