ரிஷப் பந்த் ஏன் ஓபனராக செயல்பட்டார் என்பதை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா, இறுதி ஒருநாள் போட்டிக்கான தொடக்க ஆட்டக்காரர்கள் குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-058

அகமதாபாத்: இந்தியா- மேற்கிந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியானது பிப்ரவரி 9ஆம் தேதி அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரோகித் ஷர்மாவுடன் விக்கெட் கீப்பர் ரி‌ஷப் பந்த் தொடக்க வீரராக களமிறங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.  தனிப்பட்ட காரணங்களால் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடாமல் இருந்த கே.எல்.ராகுல், இப்போட்டியில் 4வது வீரராக களமிறக்கப்பட்டார்.

தொடக்க வீரராக விளையாடும் ராகுல் 4 பவுண்டரி 2 சிக்ஸர் உட்பட 49(48) ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடினார். ஆனால் மிடில் ஆர்டரில் விளையாடும் ரி‌ஷப் பந்த் 18(34) ரன்களே எடுத்து தேவையில்லாத ஷாட் ஆடி ஓடியன் ஸ்மித் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இப்போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைபற்றியதால் தொடக்க வீரர் வரிசை குறித்து விவாதிக்கப்படவில்லை. இருப்பினும் முன்னாள் வீரர்கள் இதுகுறித்து விமர்சனம் செய்திருந்தனர்.

இந்நிலையில் ரி‌ஷப் பந்த் தொடக்க வீரரராக களமிறங்கியது குறித்து கேப்டன் ரோகித் சர்மா பேட்டி அளித்துள்ளார்.அதில், “புதுமையான சில விஷயங்களை செய்யும்படி நிர்வாகம் கேட்டுக்கொண்டதிற்கு இணங்க ,மாறுபட்ட முறையில் சிந்தனை செய்து ரி‌ஷப் பந்த் தொடக்கவீரராக களமிறக்கப்பட்டார். இந்த மாற்றத்தை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றிருப்பார்கள்.

இது தற்காலிக முயற்சியே தவிர, நிரந்தரமான முடிவல்ல. இத்தொடரின் மூன்றாவது போட்டியில் ஷிகர் தவான் நிச்சயம் விளையாடுவார். இந்த ஒரே ஒரு போட்டிக்காக மட்டும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.ஒருவேலை இந்த செயல்பாட்டில் ஒருநாள் தொடரை இழந்திருந்தாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம் ” எனத் தெளிவாக விளக்கியுள்ளார்.

இப்பேட்டியின் மூலம் கொரானா காரணமாக இரண்டு ஒருநாள் போட்டியையும் தவறவிட்ட இடது கை ஆட்டக்காரரான ஷிகர் தவன் ,நாளை நடைபெறவிருக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் ஓபனராக களமிறங்குவது உறுதியாகியுள்ளது.

மேலும் தொடரை கைபற்றியது குறித்து தொடர்ந்து பேசிய அவர், “வங்கதேசத்துக்கு எதிரான இத்தொடரை கைப்பற்றியதை சிறந்த உணர்வாக கருதுகிறேன். சில சவால்களை இப்போட்டியில் சந்தித்தோம். இதில் கே.எல்.ராகுலும், சூர்யகுமார் யாதவும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடினர். இதில் ராகுல் மட்டும் ரன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் ,அவரால் பெரிய ஸ்கோர் எடுத்திருக்க முடியும்.

இருவரும் அணிக்கு என்ன தேவை என்பதை புரிந்து செயல்பட்டனர். இருவரிடமும் நல்ல முதிர்ச்சி தென்பட்டது. அனைத்து பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசினர். குறிப்பாக பிரஷித் கிருஷ்ணாவின் பந்துவீச்சு,இப்படியொரு அபாரமான பந்துவீச்சை  நான் பார்த்ததில்லை. எப்போதுமே பந்துவீச்சாளர்களை சுழற்சி முறையில் பயன்படுத்துவது அவசியமானது” இவ்வாறு ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.