ரிஷப் பந்தை தூக்க பிளான் ரெடி: பயம் காட்டும் ரூட் ! ! !

Joe Root is confident of dismissing Rishabh Pant in the 3rd Test
Joe Root is confident of dismissing Rishabh Pant in the 3rd Test

அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பந்தை தூக்க பிளான் ரெடி என ஜோ ரூட் பேசியுள்ளார். 3 வது டெஸ்டில் ரிஷாப் பந்தை வெளியேற்ற இங்கிலாந்து எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பதை ஜோ ரூட் வெளிப்படுத்துகிறார் .

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் 168 ரன்கள் குவித்து, இந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த மூன்றாவது வீரராக உள்ளார். ஜோ ரூட் (297), ரோஹித் ஷர்மா (205) முதலிரண்டு இடங்களில் நீடிக்கின்றனர். தொடர்ந்து அரை சதங்களைக் குவிக்கக் கூடிய ரிஷப் பந்த், பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்டிலும் இங்கிலாந்து பௌலர்களுக்கு தலைவலியை ஏற்படுத்துவார் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில், தற்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜோ ரூட், “பந்தை விரைவில் வீழ்த்த கடுமையாகப் போராடுவோம்” எனத் தெரிவித்துள்ளார். .

“பந்த் சிறந்த வீரர். அற்புதமான ஷாட்களை அடித்து ஆடக் கூடியவர். நிச்சயம் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியை உண்டாக்குவார். அவரை வீழ்த்த திட்டம் உள்ளது. அவரை நிதானமாக விளையாட வைத்தால் நிச்சயம் ஆட்டமிழக்கச் செய்துவிட முடியும். விக்கெட்டிற்கான வாய்ப்பை அவர் கொடுக்கும்போது அதை சரியாகப் பயன்படுத்திக்கொண்டாலே போதும்” எனத் தெரிவித்தார். இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பங்கேற்றார். இரண்டாவது போட்டியில் இவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, ஸ்டூவர்ட் பிராடிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மூன்றாவது போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளதால், இருவரும் ஒன்றாக இணைந்து பந்துவீச வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு ரூட் பதிலளித்தார். . .

“நிச்சயமாக, அவர்கள் பங்கேற்பார்கள். அணியைத் தேர்வு செய்வது சாதாரண விஷயம் கிடையாது. தலைவலியை ஏற்படுத்த கூடிய ஒன்று. சூழ்நிலைக்கு ஏற்ப அணியைத் தேர்வு செய்வதுதான் சரியான முடிவு”. . “ஆண்டர்சனும், பிராடும் அனுபவம் வாய்ந்த பௌலர்கள். இவரும் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளனர். தங்களின் அனுபவங்களைச் சாதகமாகப் பயன்படுத்திப் பந்து வீசுகிறார்கள். இவர்களால் நிச்சயம் அதிரடி காட்ட முடியும். எதிர்காலத்திலும் ஒன்றாக விளையாட வாய்ப்பு இருக்கும். இருவரும் இணைந்து செய்த சாதனைகளை முறியடிப்பது கடினம்” எனக் கூறினார். .

இரண்டாவது டெஸ்டில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது. இந்தியா, இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத், மோடேராவில் உள்ள சர்தார் படேல் ஸ்டேடியத்தில் பகலிரவு ஆட்டமாக இன்று துவங்கவுள்ளது. .

Be the first to comment on "ரிஷப் பந்தை தூக்க பிளான் ரெடி: பயம் காட்டும் ரூட் ! ! !"

Leave a comment

Your email address will not be published.


*