ராஜஸ்தான் அணியை தனது அதிரடியான பந்து வீச்சால் வீழ்த்திய கொல்கத்தா அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது.

www.indcricketnews.com-indian-cricket-news-030
ஷார்ஜா: நேற்று அபுதாபியில் நடந்த ஐ. பி. எல் 2021 54-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலபரிட்சை கண்டது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில்  ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் ஜெயித்து  பந்துவீச்சை  தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து கேகேஆர் அணியிலிருந்து தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் – வெங்கடேஷ் ஐயர் ஜோடி களம் கண்டு அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். 
 

இதில் ராகுல் திவாட்டியா வீசிய பந்தில் வெங்கடேஷ் ஐயர் 3 பவுண்டரி 2 சிக்சர் என மொத்தம் 38 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த நிதிஷ் ராணா 12 ரன்களுடன் ஆட்டம் இழந்தார். 12 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்திருந்த நிலையில் களத்தில் இருந்த ராகுல் திரிபாதி 14 வது பந்தில்  3 பவுண்டரியுடன் 21 ரன்களில் எடுத்து சக்கரியா பந்தில் ஆட்டமிழந்தார்.

 மறுமுனையில் நிதானமாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் கிறிஸ் மோரிஸ் வீசிய பந்தில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து 44வது பந்தில் 4 பவுண்டரி 2 சிக்ஸர் என மொத்தம் 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.இதற்கு பின்னர் களம் கண்ட தினேஷ் கார்த்திக் 14 ரன்களுடனும், கேப்டன் இயன் மார்கன் 13 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல்  இருந்தனர்.

இறுதியாக  20 ஓவருக்கு 4 விக்கெட்டுகள் என மொத்தம்  171 ரன்கள் குவித்தது கொல்கத்தா அணி. இதனை தொடர்ந்து 172 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு சரியான தொடக்கம் அமையவில்லை. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால்  – லியாம் லிவிங்ஸ்டன் ஜோடி  களம் கண்டனர்.

இதில் ஜெய்ஷ்வால் எந்த ரன் எடுக்காமலும் லிவிங்ஸ்டன் வெறும் 6 ரன்களுடன் ஆட்டமிழந்தனர். அடுத்ததாக வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 1 ரன்னுடன் வெளியேறினார். சிறிது நேரம் தனது ஆட்டத்தால் தாக்குப் பிடித்த சிவம் துபே 18 ரன்களுடன் விக்கெட் இழக்க அடுத்தடுத்து களம் கண்ட க்ளென் பிலிப்ஸ், அனுஜ் ராவத் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியாக 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் சேத்தன் சகாரியா – முஸ்தாபிஜூர் ரஹ்மான் ஜோடி களம் கண்டனர்.இதில் சேத்தன் சகாரியா ரன் அவுட் ஆகவே ஆட்டம் முடிவுக்கு வந்தது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 172 ரன்கள் எடுக்க தவறிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

தனது வெற்றியை பதிவு செய்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 14 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தை தக்கவைத்துக் கொண்டது. மேலும், இந்த வெற்றியின் வாயிலாக கொல்கத்தா அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் பெற்றுள்ளது.

Be the first to comment on "ராஜஸ்தான் அணியை தனது அதிரடியான பந்து வீச்சால் வீழ்த்திய கொல்கத்தா அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது."

Leave a comment

Your email address will not be published.