ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களால், சிஎஸ்கே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

www.indcricketnews.com-indian-cricket-news-10034365
Moeen Ali of Chennai Super Kings celebrating the wicket of Jos Buttler of Rajasthan Royals during match 17 of the Tata Indian Premier League between the Chennai Super Kings and the Rajasthan Royals held at the MA Chidambaram Stadium, Chennai on the 12th April 2023 Photo by: Saikat Das / SPORTZPICS for IPL

சென்னை: 16ஆவது ஐபிஎல் தொடரின் 17ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஷ்வால் அதிரடியாக விளையாட முற்பட்டு 10(8) ரன்களில் துஷார் தேஷ்பாண்டேவிடம் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோஸ் பட்லர் -தேவ்தத் படிக்கல் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய படிக்கல் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போது 38(26) ரன்களில் ஜடேஜாவிடம் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த கேப்டன் சஞ்சு சாம்சனும் அதே ஓவரில் ரன்கள் ஏதுமின்றி க்ளீன் போல்டானார். 

அதன்பின் களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வினும் தனது பங்கிற்கு 30(22) ரன்களைச் சேர்த்து ஆகாஷ் சிங்கிடம் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது மூன்றாவது அரைசதத்தைப் பதிவுசெய்த பட்லர், 52(36) ரன்களுடன் மொயீன் அலியிடம் க்ளீன் போல்டானார். இறுதியில் துருவ் ஜொரெல் 4(6) ஜேசன் ஹோல்டர் 0(1), ஆடம் சாம்பா 1(1) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மறுமுனையில் ஷிம்ரான் ஹெட்மையர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 30(18) ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார்.

இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை சேர்த்தது. இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 8(10) ரன்களில் சந்தீப் ஷர்மாவிடம் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த டெவான் கான்வே-அஜிங்கியா ரஹானே ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹானே 31(19) ரன்களிலும், அடுத்துவந்த ஷிவம் தூபே 8(9) ரன்களிலும் அஷ்வின் பந்துவீச்சில் எல்பிடபள்யூ முறையில் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு களமிறங்கிய மொயீன் அலி 7(10) ரன்களிலும், அம்பத்தி ராயூடு ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 38 பந்துகளில் அரைசதத்தைப் பதிவுசெய்த கான்வே யுஸ்வேந்திர

சாஹலிடம் ஆட்டமிழந்தார்.

ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த ரவீந்திர ஜடேஜே -கேப்டன் எம்எஸ்தோனி ஆகியோர் தொடக்கத்தில் நிதானமாக விளையாடினாலும், பின்னர் அதிரடியாக விளையாடி அணியின் ரன்ரேட்டை உயர்த்தினர். இருப்பினும் சென்னையின் வெற்றிக்கு கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், தோனியால் ஒரு ரன் மட்டுமே எடுக்கமுடிந்தது.

இதனால் 20 ஓவர்களில் சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த தோனி 32(17) ரன்களையும், ஜடேஜா 25(15) ரன்களையும் சேர்த்திருந்தனர். இதன்மூலம் ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.

Be the first to comment on "ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களால், சிஎஸ்கே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது."

Leave a comment

Your email address will not be published.


*