ரவிச்சந்திரன் அஷ்வின் தனது சாதனையை முறியடித்தது குறித்து கபில்தேவ் பதிலளித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-037

நியூ டெல்லி: டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறப்பான பங்களிப்பை செய்து, ஆல்ரவுண்டராக திகழும் இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னரான அஷ்வின் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மொத்தம் 85 டெஸ்ட் போட்டிகளில் 159 இன்னிங்ஸ் விளையாடி 436 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், 227 இன்னிங்ஸில் 434 விக்கெட்டுகளை வீழ்த்திய லெஜண்ட் ஆல்ரௌண்டரான கபில் தேவை பின்னுக்குத்தள்ளி இரண்டாமிடத்தை பிடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ள இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை தமிழகத்தைச் சேர்ந்த ரவிசந்திரன் அஷ்வின்  படைத்துள்ளார். மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் டாப்10 இடங்களில் அஷ்வின் இடம்பிடித்துள்ளார் .

இந்நிலையில் முன்னாள் ஆல்ரவுண்டரான கபில் தேவ் அஷ்வினின் அற்புதமான சாதனையை பாராட்டி மிட்-டேக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “1983ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற ஆஃப் ஸ்பின்னரான அஷ்வினுக்கு சமீப காலங்களில் போதிய வாய்ப்புகள் வழங்கப்பவில்லை.ஆனால் அவருக்கான வாய்ப்புகள் மட்டும் முன்பே கிடைத்திருந்தால் 434 விக்கெட்டுகளை கடந்து, எனது  சாதனையை என்றோ முறியடித்திருப்பார்.

இப்போட்டியின் மூலம் அஷ்வின் இரண்டாவது இடத்தை அடைந்தது  மிகப்பெரிய சாதனையாகும். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் காலம் கடந்துவிட்டது , அவரிடமிருந்து இரண்டாவது இடத்தை நான் ஏன் பிடிக்க வேண்டும். இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மைல்கல்லை எட்டியுள்ள 35 வயதான அஷ்வினின் எதிர்காலத்தைப் பொறுத்தவரை ,கும்ப்ளேவைக் கடந்து செல்ல நிறைய விக்கெட்டுகள் தேவைப்படும்.” என்று ஒரு பெரிய சாதனையை அடைய இந்திய ஸ்பின்னரை கபில் ஆதரித்துள்ளார்.

மேலும் அஷ்வின் குறித்து கூறுகையில், “அவர் ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர். சிறந்த மற்றும் புத்திசாலித்தனமான சுழற்பந்துவீச்சாளர்.  இனிவரும் போட்டிகளில் 500 டெஸ்ட் ஸ்கால்ப்களை அஷ்வின் இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் .அவர் நிச்சயம் முயற்சி செய்து சாதிப்பார் என்று நான் நம்புகிறேன்” இவ்வாறு கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

மேலும் ,கடந்த இரண்டு நாட்களாக தனக்கு ஆதரவாக வந்த அனைத்து பாராட்டுக்களிலும் திளைத்து,  தனக்கு கிடைத்த வாய்ப்புகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் ஒரு இதயப்பூர்வமான தகவல் ஒன்றை அஷ்வின் பதிவிட்டுள்ளார். அதில்,”28 ஆண்டுகளுக்கு முன்பு, நான் சிறந்த விக்கெட்டுகளின் உலக சாதனையைப் பெற அவரை (கபில் தேவ்) உற்சாகப்படுத்தினேன்.

ஆனால் நான் ஒரு ஆஃப் ஸ்பின்னராக மாறி அவருடைய விக்கெட்டுகளையே கடந்து செல்வேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. எனக்கு கிடைத்த இந்த வாய்ப்புக்கு எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.” இவ்வாறு அஷ்வின் தெரிவித்துள்ளார்.