ரஞ்சிக் கோப்பையில் ஸ்ரீசாந்த்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஸ்ரீசாந்த் நீண்ட இடைவெளிக்குப் பின் கிரிக்கெட் உலகிற்கு திரும்பியுள்ளார். சூதாட்ட புகார் காரணமாக ஸ்ரீசாந்த் கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, நீதிமன்றத்தால் தடை காலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதால் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 37 வயதாகும் ஸ்ரீசாந்த் இந்திய அணியின் ஆக்ரோஷம் மிகுந்த பந்து வீச்சாளராகத் திகழ்ந்தார். 2013ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக நன்றாக விளையாடி வந்த ஸ்ரீசாந்த், ஐபிஎல் போட்டியின் போது சூதாட்டப் புகாரில் சிக்கினார். விசாரணையில் இவர் மீதான புகார் உறுதியானது. இதன் காரணமாக சில ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டது.

இந்திய அணிக்காக இவர் 53 ஒருநாள் போட்டிகள், 27 டி20 போட்டிகள் மற்றும் 10 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மிகவும் ஆக்ரோஷமாக விளையாடினார். அவரின் நேர்த்தியான பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் திணறினார்கள். ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக ஸ்ரீசாந்த் விளையாடினார். 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சூதாட்ட புகாரில் சிக்கினார். புகார் உறுதியானதால் கிரிக்கெட் விளையாட வாழ்நாள் நடை விதிக்கப்பட்டது. பின், மேல்முறையீடு காரணமாக அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கப்பட்டது.

இங்கிலாந்து அணியில் இடம்பெற்று இருக்கும் வீரர்கள், ஸ்ரீசாந்த், கிரிக்கெட் போட்டிகளின் போது வெளிப்படுத்திய ஆக்ரோஷத்தைச் சர்வதேச கிரிக்கெட் வாரியம் பலமுறை கண்டித்தது. 2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிசிசிஐ சார்பில், ஸ்ரீசாந்திற்கு இறுதி எச்சரிக்கை செய்யப்பட்டது. மைதானத்தில் எதிரணி வீரரைப் பார்த்து தவறான முறையில் சைகை காட்டினால் தக்க தண்டனை வழங்கப்படும் என்று எச்சரித்தது. ரஞ்சி டிராபி போன்ற பல்வேறு உள்ளூர் போட்டிகளிலும் ஸ்ரீசாந்த ஆக்ரோஷமாக எத்திரணியைச் சீண்டியுள்ளார். இதனால், அவருக்குப் பலமுறை போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது.

அடாவடி காரணமாக நீண்ட நாட்களாக அணியில் இடம்பெறாமல் இருந்து வந்த ஸ்ரீசாந்த் 2009ஆம் நவம்பர் மாதம் மீண்டும் அணிக்குத் திரும்பினார். இலங்கைக்கு எதிரான போட்டியில் இடம்பெற்ற ஸ்ரீசாந்த் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். அப்போட்டியில், ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். நீதிமன்றத்தை நாடி வாழ்நாள் தடையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ள இவர், தற்போது புகழ்பெற்ற உள்ளூர் தொடரான ரஞ்சி டிராபியில் கேரள அணிக்காக விளையாட உள்ளார் என்று பேசப்படுகிறது. கேரள கிரிக்கெட் வாரியம் ஸ்ரீசாந்த் தொடர்பாகத் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

Be the first to comment on "ரஞ்சிக் கோப்பையில் ஸ்ரீசாந்த்!"

Leave a comment

Your email address will not be published.