யார்க்கர் கிங் பும்ரா காயம்… : தென் ஆப்ரிக்க தொடரில் இருந்து விலகல்!

மும்பை: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில், காயமடைந்துள்ள பும்ராவுக்கு பதில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டார்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 3 ‘டி–20’, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ‘டி–20’ தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து அடுத்ததாக தென் ஆப்ரிக்க அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

பும்ராவுக்கு என்ன ஆச்சு? டெஸ்ட் தொடரில் திடீர் நீக்கம்.. வாய்ப்பை தட்டிச் சென்ற அந்த வீரர்

இந்த நிலையில், டெஸ்ட் தொடரையாவது இந்தியா கைப்பற்ற வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் தான், இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருந்த வேகப் பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் இந்த தொடர் முழுவதும் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பெரிய அளவில் சாதிக்காத துவக்க வீரர் ராகுல் நீக்கப்பட்டார். அதேபோல ரோஹித் ஷர்மா, சகா அணியில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து பங்கேற்கும் பும்ராவிற்கு உரிய நேரத்தில் ஓய்வு அளிக்க வேண்டுமென சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசுகையில், “இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து பும்ராவிற்கு ஓய்வளிக்கலாம். பும்ராவின் திறமையை சொந்த மைதானத்தில் நிரூபிக்க தேவையில்லை. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை இந்தியா வெல்ல பும்ராவின் பங்களிப்பு மிகவும் முக்கியம்.

இந்திய அணியில் புவனேஸ்வர் குமார், ஷமி, இஷாந் சர்மா ஆகியோர் சிறப்பான முறையில் பந்துவீசி வருகின்றனர். அனைத்து போட்டிகளிலும் பும்ராவிற்கு வாய்ப்பு வழங்காமல் அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். சில முக்கியமான போட்டிகளில் மட்டும் பும்ராவை விளையாட வைக்க வேண்டும்“ என்றார்.

சுப்மான் கில் இத்தொடரில் அறிமுக வீரராக வாய்ப்பு பெற்றார். இந்நிலையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா காயமடைந்துள்ளதால் இவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் மாற்று வீரராக களமிறங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

விராட் கோலி (கேப்டன்), மாயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே (துணைக்கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், விர்திமான் சகா, அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா, சுப்மான் கில்

Be the first to comment on "யார்க்கர் கிங் பும்ரா காயம்… : தென் ஆப்ரிக்க தொடரில் இருந்து விலகல்!"

Leave a comment

Your email address will not be published.


*