மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20க்கு முன்னதாக சுழற்பந்து வீச்சாளர்களின் பங்கு குறித்து ரோஹித் ஷர்மா பேசியுள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-072

அகமதாபாத் : கணிசமான நேரத்தை செலவிட்ட பிறகு, யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சர்வதேச தொடருக்கு திரும்பியுள்ளனர். கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பைக்கு பரிசீலிக்கப்படாத சாஹல், ஆண்டின் இறுதியில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக  விளையாடிய  தொடரில் மீண்டும் அணிக்கு திரும்பினார். அதேபோல மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகியுள்ளதால் ,அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் டி20 தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

முந்தைய காலத்தில் சஹாலும் குல்தீப்பும் சிறப்பாகப் பந்துவீசியுள்ளார்கள். இருவரும் ஒன்றாக இணைந்து விளையாடியபோது தாக்கத்தை ஏற்படுத்தினார்கள்.அதிலும் கடந்த 2019 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் இணைந்து சிறப்பாகப் விளையாடினர்.   அதன்பின்னர் கூடுதல் பேட்டர், கூடுதல் வேகப்பந்துவீச்சாளர் போன்ற அணித் தேர்வுக்காக இருவரில் ஒருவர் விளையாட முடியாமல் போனதால்,அதன்பின்னர் நடைபெற்ற தொடர்களில் இருவராலும் ஒன்றாக விளையாடவில்லை.

இந்நிலையில் கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று முதல் தொடங்கவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி 20ஐ தொடரில் இந்திய அணி, சாஹல் மற்றும் குல்தீப் இருவரையும் ஒன்றாக களமிறக்குவது சுவாரஸ்யமானது. எனவே மீண்டும் அணியில் இடம்பெறவிருக்கும் இவர்கள் இருவரும் ஆடுகளத்தில் ஒன்றாக இணைந்து விளையாடுவதை காண விரும்பும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் இந்திய ஒருநாள் அணியில் சஹால், 2021ஆம் ஆண்டு முதல் 5 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். குல்தீப் யாதவ் கடந்த வருடம் 4 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஜோடியைப் பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட கேப்டன் ரோஹித் சர்மா, “இவர்கள் இருவரும் இந்திய அணிக்கு கிடைத்த பெரிய சொத்து என்று கூறிய ரோகித், இருவரின் சிறப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டினார். இருப்பினும், டி20 கிரிக்கெட் வீரர்கள் தங்கள் தனித்துவத்தை தவிர கூடுதல் திறன்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று டி20 கிரிக்கெட் கோருகிறது.அதனால்தான் மற்ற வீரர்களை விட இவ்விருவரும் முன்னுரிமை பெறுகிறார்கள் என்பதையும் ரோகித் ஷர்மா சுட்டிக்காட்டினார்.

மேலும் இது குறித்து கூறுகையில், “குறுகிய வடிவத்தில், பேட்டிங் செய்யக்கூடிய பந்துவீச்சாளர்கள் அணிக்கு தேவை.அதனால்தான் சில சமயங்களில் வீரர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். அந்தவகையில் இந்த திறமை கொண்ட இவ்விருவரும் அவர்களின் பங்களிப்பை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை எடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை, ” இவ்வாறு பத்திரிக்கையாளர்களிடம் ரோகித் ஷர்மா கூறினார்.