மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியை வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

www.indcricketnews.com-indian-cricket-news-054

அகமதாபாத்: இந்தியா- மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித் ஷர்மா5(8) ரன்களில் கேமர் ரோச் பந்துவீச்சால் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில்  ரிஷப் பந்த் 3 பவுண்டரி உட்பட 18(34) ரன்களில் தேவையில்லாத ஷாட் ஆடி ஓடியன் ஸ்மித் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதே ஓவரில் விராட் கோலியையும் 18 (30) ரன்களில் ஓடியன் ஸ்மித் பெவிலியனுக்கு அனுப்பினார்.

இதனையடுத்து சூர்யகுமார் யாதவ் மற்றும் கே.எல்.ராகுல்  பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் ராகுல் 4 பவுண்டரி 2 சிக்ஸர் உட்பட 49(48) ரன்கள் எடுத்த போது ரன் அவுட் ஆனார். மறுமுனையில் சதம் விளாசிய சூர்யகுமார் 5 பவுண்டரி உட்பட 64(83) ரன்கள் எடுத்தபோது ஸ்வீப் ஷாட் ஆடி நடையைக் கட்டினார்.

தொடர்ந்து களமிறங்கிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 24(41) ரன்கள் எடுத்தபோது அகில் ஹோசைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மேலும் ஷர்தூல் 8(15),சிராஜ் 3(5), சாஹல் 11(10) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, தனியொரு ஆளாக போராடிய தீபக் ஹூடாவும் 2 பவுண்டரி உட்பட 29(25) ரன்கள் எடுத்தபோது ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா 9 விக்கெட்டு இழப்புக்கு 237 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் தொடக்க ஆட்டக்காரர்களான சாய் ஹோப்  27 (54) ரன்கள் எடுத்தபோது சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய பிராண்டன் கிங் 18(20) ரன்கள் எடுத்தபோது பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தில் வெளியேறினார். 

தொடர்ந்து களமிறங்கிய பிராவோ 1(3), பூரான் 9(13),ஜேசன் ஹோல்டர் 2(10), ஃபெபியன் ஆலன் 13(22) அகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். இந்நிலையில் நீண்டநேரம் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த புருக்ஸ் 44(64) ரன்கள் எடுத்தபோது ஹூடா பந்துவீச்சிலும், அகேல் ஹூசைன் 34(52) ரன்கள் எடுத்தபோது ஷர்தூல் பந்துவீச்சிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக அணியை காப்பாற்ற ஒடியன் ஸ்மித் – அல்ஜாரி ஜோசப் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இதில் ஒடியன் ஸ்மித் 24 (20) ரன்கள் எடுத்தபோது வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் நடையைக் கட்டினார். மேலும் ஜோசப் 7 (15) மற்றும் கேமர் ரோச் 0 (6) ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இருப்பினும் மேற்கிந்தியத் தீவுகள் 46வது ஓவர் முடிவில் 10 விக்கெட்டுக்கு 193 ரன்கள் மட்டும் எடுத்து, 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இதனால் இந்தியா 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது.