மூன்றாவது டி20 போட்டியைத் தொடர்ந்து திலக் வர்மா கம்பீரை பின்னுக்கு தள்ளினார். சிக்ஸர் அடித்த சூர்யகுமார் புதிய டி20 சாதனையை பதிவுசெய்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-10034894

டெல்லி: இந்தியா -மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது மூன்று போட்டிகள் முடிவடைந்து இருக்கின்றன. நடந்துமுடிந்த மூன்று போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளை மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றிபெற்றது. ஆனால் நேற்று முன்தினம் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தற்போது தொடரில் நீடிக்கிறது.

இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் இந்திய அணி வெற்றிபெற உதவினர். குறிப்பாக ஐபிஎல் தொடரில் இதுவரை ஆறு முறை 50-க்கும் மேற்பட்ட பார்ட்னர்ஷிப்களைச் சேர்த்துள்ள மும்பை இந்தியன்ஸ் ஜோடியான இவர்கள், இந்திய அணிக்காக முதன்முறையாக இந்த வெற்றியை பதிவுசெய்து அசத்தியுள்ளனர்.

வெற்றிபெற்றாக வேண்டிய மிக முக்கியமான இப்போட்டியில் திலக் வர்மா, சக மும்பை இந்தியன்ஸ் சீனியர் வீரரான இந்திய அணியின் நட்சத்திர டி20 பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவுடன் இணைந்து மிக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியா வெற்றிபெற உதவினர். இந்திய அணி தோல்வியடைந்த முதல் இரண்டு போட்டிகளில், 39 மற்றும் 51 ரன்கள் எடுத்திருந்த 21 வயதான ஹைதராபாத்தைச் சேர்ந்த திலக் வர்மா, மூன்றாவது போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி 49 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்திலிருந்தார். இதன்மூலம் முதல் மூன்று இன்னிங்ஸ்களில் 139 ரன்கள் எடுத்திருந்த திலக் இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்திருந்தவர் பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அதேசமயம் 2007 டி20 உலகககோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 109, நியூசிலாந்துக்கு எதிராக 51 மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக 58 என இந்தியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான கௌதம் கம்பீரை பின்னுக்கு தள்ளினார். ஆனால் 172 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கும் தீபக் ஹூடாவின் சாதனையை திலக் வர்மாவால் மறியடிக்க முடியவில்லை. இந்திய வெள்ளைப்பந்து அறிமுகப் போட்டியிலிருந்து தொடர்ந்து 30 ரன்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ள இவர், டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் 21 இடங்கள் உயர்ந்து, 67வது இடத்திலிருந்து 46வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அதேபோல சூர்யகுமார் யாதவும் 44 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 83 ரன்கள் குவித்து தொடர்ந்து தனது முதலிடத்தை தக்க வைத்திருக்கிறார். உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்து 2016க்குப்பின் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக  இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பாற்றிய இவர், இப்போட்டியில் அடித்த 4 சிக்ஸர்களையும் சேர்த்து 100 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்களை அடித்த 3ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ், அதிவேகமாக 100 சிக்சர்கள் அடித்து உலகளவில் சர்வதேச கிரிக்கெட்டில் வேகமாக 100 சிக்ஸர்களை அடித்த 2வது வீரர் என்ற ஜாம்பவான் கிறிஸ் கெயில் சாதனையையும் சமன் செய்துள்ளார்.

Be the first to comment on "மூன்றாவது டி20 போட்டியைத் தொடர்ந்து திலக் வர்மா கம்பீரை பின்னுக்கு தள்ளினார். சிக்ஸர் அடித்த சூர்யகுமார் புதிய டி20 சாதனையை பதிவுசெய்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*