முன்னாள் தேசிய கிரிக்கெட் ஆணைய தேர்வாளர், “புஜாரா மற்றும் ரஹானேவுக்கு பதிலாக மூன்று வீரர்களை தேர்வு செய்துள்ளார்”.

www.indcricketnews.com-indian-cricket-news-0084

டெல்லி: நட்சத்திர வீரர்களான செத்தேஷ்வர் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகிய இருவரும் இந்திய டெஸ்ட் அணியின் தூண்களாக திகழ்ந்து வருகின்றனர். புஜாரா  90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி  6494 ரன்களும் ரஹானே 78  டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4756 ரன்களும் குவித்துள்ளனர். பல சூழ்நிலையில் இந்திய அணியை காப்பாற்றிய இவர்கள் அண்மைக் காலமாக  இருவரின் ஃபார்ம் மோசமாக இருக்கிறது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இவர்கள் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக சொதப்பி வந்ததால், இவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் குறித்து ஆலோசித்து வருகின்றனர். இந்திய அணியில் திறமையான  இளம்வீரர்கள் பலர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலும் சிலர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அபாரமாக விளையாடும் அளவிற்கு  திறமையானவர்கள் என நிரூபித்துள்ளனர்.

அதனால் அணியில் இந்த மாற்றம் கண்டிப்பாக  செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட தகுதி வாய்ந்தவர்கள் இருப்பதால் அவர்களுக்கெல்லாம் வாய்ப்பளிப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் தேர்வாளர் ஜதீன் “புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் கடந்த 15 டெஸ்ட் தொடரில் 644 ரன்கள் எடுக்கவே திணறினர். மேலும் இருவரின் கெரியர்  இப்போதோ அல்லது எப்போதோ, முடிந்துதான் ஆகவேண்டும்.

அவர்களுக்கு பதில் மாற்று வீரர்களாக சுப்மன் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில், ஷ்ரேயாஸ் ஐயர் தவிர மற்ற இரண்டு வீரர்களும் டெஸ்ட் தொடரில் விளையாடியுள்ளதால் இவர் மட்டுமே டெஸ்ட் தொடரில் விளையாடி நல்ல ஃபார்ம்க்கு  வர பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மேலும்

கான்பூரில் வரும் நவம்பர் 25-ம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் விளையாடினால் சர்வதேச டெஸ்ட் தொடரில்  விளையாட வாய்ப்பு கிடைக்கும். ஒருவேளை அந்த வாய்ப்பு தவறினாலும் கவலை வேண்டாம் .அதற்கான நேரம் வரும்போது அதை பயன்படுத்திக்கொண்டு சிறப்பாக செயல்படலாம் என்று  தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய அணியில் விளையாடி வரும் சுப்மன் கில் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டு டெஸ்ட் தொடரிலும் விளையாடுவார் என தெரிவித்துள்ளார். ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்களும் மிடில்ஆர்டரில் விளையாடும் வீரர்களும் முக்கிய பங்கு வகிப்பர்.

சுப்மன் கில் மிடில் ஆர்டரில் விளையாடினால் நிச்சியம் இந்திய அணி வெற்றிபெற வாய்ப்பு உண்டு என்றும்,  இதற்கு முன்னர் கே எல் ராகுல் மிடில் ஆர்டரில் விளையாடி பல வெற்றிகளை குவித்துள்ளார் என்பதை குறிப்பிட்டுள்ள அவர் சுப்மன் கில்லும் அதை அப்படியே பிரதிபலிப்பார் என கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இவரை தொடர்ந்து அடுத்த வாய்ப்பு விக்கெட் கீப்பர் ரித்திமான் சாகாவுக்கு வாய்ப்புகள் அதிகம் என கருத்து தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "முன்னாள் தேசிய கிரிக்கெட் ஆணைய தேர்வாளர், “புஜாரா மற்றும் ரஹானேவுக்கு பதிலாக மூன்று வீரர்களை தேர்வு செய்துள்ளார்”."

Leave a comment

Your email address will not be published.


*