முன்னாள் ஆல்ரொண்டர் வீரரான யுவராஜ் சிங் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பவுள்ளதாக அறிவித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-0013

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ம் தேதி இந்திய கிரிக்கெட் அணியில் 19 ஆண்டுகள் பணியாற்றிய  ஆல்-ரவுண்டராக வலம்வந்த யுவராஜ் சிங் தனது 37 வயதில் அனைத்து வகையான தொடர்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பிசிசிஐ விதிமுறைப்படி வெளிநாடுகளில் நடக்கும் டி20 பிரிமியர் லீக் போன்ற போட்டிகளில்  அணியிலிருந்து ஓய்வு பெற்ற ஒருவர் மட்டுமே விளையாட முடியும் என்பதால் அதில் தொடர்ந்து ஆடி வருகிறார். 

இந்திய அணிக்கு 2000 ஆம் ஆண்டில் அறிமுகமாகி பல்வேறு போட்டிகளில் மிடில் ஆர்டரில் தூணாக செயல்பட்டு தேவைப்படும் வேலைகளில் சுழற்பந்துவீசி விக்கெட்டுகளை கைபற்றும் இவர் 2007ல் சர்வதேச உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசிய வெறித்தனமான ஆட்டத்தைக் கண்டு ரசிக்காத ரசிகர்களே இல்லை.

2007 சர்வதேச உலகக் கோப்பை மற்றும் 2011 ODI உலகக் கோப்பைகளில் 90.50 சராசரியில் 362 ரன்கள் குவித்து 15 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் டி20 மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர்களில் வெல்ல மிகப்பெரும் பங்காற்றியவர்.  2011 உலகக் கோப்பை போட்டியில்  வென்ற போது  தொடர் நாயகன் பட்டத்தை வென்றார்.

அத்தொடர் முடிந்த சிலநாட்களிலேயே அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. புற்றுநோயிலிருந்து மீண்டு மீண்டும் களமிறங்கிய  அவரால் பெரியளவில் சோபிக்க முடியாததால் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் 2019ஆம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார்.  இச்சூழலில் தற்போது தான் மீண்டும் இந்திய அணிக்குள் வர இருக்கிறேன் என்ற அவரது இன்ஸ்டாகிராம் பதிவு வேகமாகப் பரவி வருகிறது.

அதில் கடைசியாக விளையாடிய இங்கிலாந்து அணிக்கெதிராக  150 ரன்களை குவித்து சதமடித்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அத்துடன் “உங்கள் தலைவிதியை கடவுள்தான் தீர்மானிக்கிறார். ரசிகர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை ஏற்று, தான் ஓய்விலிருந்து வெளியேறுவதாகவும் 2022 பிப்ரவரி மாதம் மீண்டும் களம் இறங்குவேன் என்று நம்புகிறேன். எனக்கு நிறைய அர்த்தங்களை உணர்த்தியுள்ளது.

இதிலுள்ள  உணர்வு  வேறு எதிலும் எனக்கு இல்லை. உங்கள் அனைவரின் அன்பிற்கும், வாழ்த்துக்களுக்கும் என் நன்றி .தொடர்ந்து அணிக்கு ஆதரவு தாருங்கள். நமது அணிக்கு என்றும் துணையாக இருப்போம். கடினமான நேரங்களில் உண்மையான ரசிகர்கள் கைவிடாமல் ஆதரவை வெளிப்படுத்திய இந்த உணர்வை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று அவர் பதிவிட்டுள்ளார்.

டி20 2021  உலகக்கோப்பையில் இந்தியா  இரண்டு தொடர் தோல்விகளைச் சந்த்திருக்கும் வேளையில் இந்த பதிவால் கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பும் குழப்பமும் ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்திய அணியில் எந்த ரோலில் களமிறங்குவார் என்கின்ற சஸ்பென்ஸ்ம் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

மேலும் இந்தியாவுக்காக 304 ஒருநாள் போட்டியில் 8701 ரன்கள் மற்றும் 111 விக்கெட்டுகள்,  58 டி20  மற்றும் 40 டெஸ்ட் போட்டிகளில் 1900 ரன்கள் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "முன்னாள் ஆல்ரொண்டர் வீரரான யுவராஜ் சிங் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பவுள்ளதாக அறிவித்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*