முதல் பந்துலேயே சிக்ஸர் அடிப்பேன்..! ஓய்வறையில் சொன்னதை செய்துகாட்டிய இஷான் கிஷன்…

www.indcricketnews.com-indian-cricket-news-147

தான் களத்திற்கு செல்லும் முன்பே, முதல் பந்தை எங்கு போட்டாலும் சிக்ஸர் அடிப்பேன் என்று ஓய்வறையில் சொல்லிவிட்டு வந்து, அதேபோல் மைதானத்தில் சிக்ஸர் அடித்ததாக இஷான் கிஷன் கூறினார். இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றது. கொழும்பில் நடந்த அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 262 ரன்கள் அடிக்க, ஷிகர் தவானின்  பேட்டிங்(86), பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவின் அதிரடி பேட்டிங், இஷான் கிஷனின் அரைசதத்தால்(59) 37வது ஓவரிலேயே  இந்திய அணி அபாரமாக வெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியில் இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் அறிமுகமாக்கப்பட்டனர். விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தான் ஆடுவதாக இருந்தது. ஆனால் சஞ்சு சாம்சன் காயத்தால் இஷான் கிஷன் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாக்கப்பட்டார். அந்த வாய்ப்பை சிறப்பாகவும் பயன்படுத்தினார்.  6வது ஓவரின் 4வது பந்தில் களத்திற்கு வந்த இஷான் கிஷன், தனஞ்செயா டி சில்வா வீசிய அந்த பந்தை சிக்ஸருக்கு விளாசி அசத்தலாக தனது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் கெரியரை ஆரம்பித்தார். இந்த போட்டியில் முதல் விக்கெட் இழப்பிற்கு பின்னர் களம் கண்ட இந்திய அணியின் இளம் வீரரான இஷான் கிஷன் இதுவரை இந்திய வீரர்களில் யாரும் படைக்காத சாதனையை படைத்துள்ளார். சிக்ஸருடன் தொடங்கிய இஷான் கிஷன் 42 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் (59) ரன்களைக் குவித்தார். முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தது குறித்து பேசிய இஷான் கிஷன், முதல் பந்தை எப்படி போட்டாலும் அதை சிக்ஸர் அடிப்பேன் என்று ஓய்வறையில் தனது சக வீரர்களிடையே சொல்லிவிட்டுத்தான் வந்ததாகவும் அது அனைவருக்குமே தெரியும் என்றும் இஷான் கிஷன் கூறினார். மேலும் அறிமுக போட்டியிலேயே டி20 மற்றும் ஒருநாள் போட்டி ஆகிய 2 தர போட்டிகளிலும் அரை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும், உலகளவில் இந்த சாதனையை படைக்கும் இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். எனவே அவரது இந்த சாதனைக்காக கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் தங்களது பாராட்டுகளையும் அவர் மேலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவதற்க்கும் வாழ்த்துக்களை தெரிவித்து ட்வீட் செய்துவருகின்றனர்.

Be the first to comment on "முதல் பந்துலேயே சிக்ஸர் அடிப்பேன்..! ஓய்வறையில் சொன்னதை செய்துகாட்டிய இஷான் கிஷன்…"

Leave a comment

Your email address will not be published.


*