டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்
ஒடேன்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்றில்
இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து வெற்றி பெற்றுள்ள நிலையில், மற்றொரு
முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் முதல் சுற்றில் ஜப்பானைச் சேர்ந்த சயாகா தகாஹாஷியை
எதிர்கொண்டார். இதில் சாய்னா 15-21, 21-23 நேர்செட்டில் தோல்வியடைந்தார்.
மற்றும் சீனா மற்றும் கொரியா
ஓபனில் 32 பேர் கொண்ட சுற்றில் வெளியேறிய நிலையில், தற்போது முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தனர்.
முதல் செட்டில் சாய்னாவும் ஜப்பான் வீராங்கனையும் ஒரு கட்டத்தில் 7-7 என சமநிலையில்
இருந்தனர். அதன்பின் ஜப்பான் வீராங்கனை தகாஹாஷி 11-8 என முன்னிலைப் பெற்றார். இடைவேளை
முடிந்து ஆட்டம் தொடங்கியதும் தகாஹாஷி சாய்னாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். அவரது
நெருக்கடியை சாய்னாவால் எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் தகாஹாஷி 20-13 என முன்னிலைப்
பெற்று, அதன்பின் 21-15 என முதல் செட்டை கைப்பற்றினார்.
2-வது செட்டிலும் இடைவேளை வரை இழுபறியாகவே சென்றது. மற்றும் தகாஹாஷி 11-9 என முன்னிலைப்
பெற்றிருந்தார். அதன்பின் தகாஹாஷி 15-10 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் தகாஹாஷி
15-13 என முன்னிலைப் பெற்ற பிறகு, ஆட்டம் 20-20 என சமன் பெற்றது. இறுதியில் தகாஹாஷி
23-21 என வெற்றி பெற்றார்.
தகாஹசிக்கு எதிராக 6 முறை மோதியுள்ள சாய்னா அதில் சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சமீர் வர்மா (இந்தியா) 21-11, 21-11 என்ற நேர் செட் கணக்கில் கன்டா சுனியாமாவை (ஜப்பான்) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அதே சமயம் இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் 14-21, 18-21 என்ற நேர் செட் கணக்கில் ஆன்டோசெனிடம் (டென்மார்க்) தோல்வியை தழுவினார்.
மற்ற இந்திய ஜோடி சத்விக்சைராஜ் ரங்கிரெட்டி மற்றும் அஸ்வினி பொன்னப்பா கடைசி நிமிடத்தில் விலகினர். அஸ்வினிக்கு முழங்கால் பிரச்சினை இருப்பதாக அணி பிசியோதெரபிஸ்ட் கிரண் டோயிடம் கூறினார், ஆனால் அது பலத்த காயம் அல்ல.
பெண்கள் ஒற்றையர் போட்டியில் இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்கா துன்ஜுங்கை எதிர்த்து சிந்து நேர் ஆட்டத்தில் வெற்றி பெற்றார். அவர் முன்னாள் உலக ஜூனியர் சாம்பியன் கிரிகோரியாவை 22-20, 21-18 என்ற கணக்கில் 38 நிமிடங்களில் தோற்கடித்தார்.
Be the first to comment on "முதல் சுற்றிலேயே நாக் அவுட் ஆனார் சாய்னா நேவால், டென்மார்க் ஓபன் தொடரில் வெளியேற்றம்"