முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா அணி

www.indcricketnews.com-indian-cricket-news-141

கொழும்பு: இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் ஜூலை 18 – ல் தொடங்கப்பட்டது. போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனகா பேட்டிங் தேர்வு செய்தார்,இலங்கை தொடக்க ஆட்டக்காரர்களான அவிஷ்கா (32) மற்றும் மினோத் (27) ரன்கள் எடுத்து ஆவுட் ஆனார்கள்.  இதன்பின்பு ஆடிய பனுகா (24) ரன்களும், தனஞ்ஜெயா (14) ரன்களும் எடுத்தனர். எனவே, இலங்கை அணி 25 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 117 ரன்கள் சேர்த்திருந்தார்கள்.  பின்பு, அடுத்து விளையாடிய சரித் (38), தசுன் சனகா (39) ரன்கள் எடுத்துக் கொடுத்தனர். வனின்டு (8) ரன்களில் வெளியேறியேற்றபட்டார். சமிகா கருணாரத்னே அதிரடியாக விளையாடி 2 பவுண்டரிகள், 1 சிக்சர் அடித்து (43) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.  இசுரு (8) ரன்களில் ஆட்டமிழந்தார்.  சமிகாவுடன் இணைந்து ஆடிய துஷ்மந்தா சமீரா (13) ரன்களில் ரன்அவுட் ஆக்கப்பட்டார். 50  ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து இலங்கை 262 ரன்களைக் கொண்டிருந்தது.  இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ், தீபக் சஹர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட்டுகள், குருணல் பாண்ட்யா மற்றும் ஹர்தீக் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  இந்திய அணி வெற்றி பெற (263) ரன்கள் இலக்காக அமைந்தது. இதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்ய தொடங்கிய நிலையில், தொடக்க வீரர்களான பிருத்வி ஷா (43) ரன்களில் பெர்னாண்டோவிடம் கேட்ச் அவுட் ஆனார். இஷான் கிஷன் (59), மணீஷ் பாண்டே (26) ரன்களில் வெளியேறினார்கள்.  தவானுடன் இணைந்து விளையாடிய சூர்ய குமார் யாதவ் (31) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.  தவான் 86 (95 பந்துகள் 6 பவுண்டரி, 1 சிக்சர்) ரன்களுடன் களத்தில் நீடித்து இருக்கிறார்.  இலங்கையின் தனஞ்ஜெயா 2 விக்கெட்டுகளும், லக்ஷன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.இந்திய அணி 36.4 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ரன்களை சேர்த்தது.  இதனால், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது.

Be the first to comment on "முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா அணி"

Leave a comment

Your email address will not be published.


*