முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் சேர்ப்பு

முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் சேர்ப்பு
முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் சேர்ப்பு

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் எடுத்துள்ளது.

தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ரோகித் சர்மா (6 ரன்) வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் சிக்கினார். நீண்ட நேரம் நிலைக்காத சுப்மான் கில்லும் ஆர்ச்சரின் பந்துவீச்சில் வீழ்ந்தார். தொடக்க ஜோடியின் விக்கெட் இவ்வளவு எளிதில் கிடைக்கும் என்று இங்கிலாந்து வீரர்களே எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்.

இதன் பின்னர் புஜாராவும், கேப்டன் விராட்கோலியும் கைகோர்த்தனர். எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி (11 ரன், 48 பந்து) ஏமாற்றம் அளித்தார். அவர் டாம் பெஸ்சின் சுழலில் பந்தை தடுத்து ஆட முற்பட்ட போது அருகில் நின்ற ஆலி போப்பிடம் கேட்ச் ஆகிப்போனார். அடுத்து வந்த துணை கேப்டன் ரஹானே (1 ரன்) டாம் பெஸ்சின் ஓவரில் சில அடி இறங்கி வந்து பந்தை ‘கவர்’ திசையில் விரட்டிய போது ஜோ ரூட் பாய்ந்து ஒற்றைக்கையால் கேட்ச் செய்து அசத்தினார். அப்போது இந்தியா 73 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தள்ளாடியது. இந்த நெருக்கடிக்கு மத்தியில் புஜாராவுடன், விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் ஜோடி சேர்ந்தார்.

அணியின் ஸ்கோர் 192 ரன்களாக உயர்ந்த போது புஜாரா டாம் பெஸ்சின் பந்து வீச்சில் வித்தியாசமான முறையில் ஆட்டம் இழந்தார். சிறிது நேரத்தில் ரிஷாப் பண்ட் (91 ரன், 88 பந்து, 9 பவுண்டரி, 5 சிக்சர்) டாம் பெஸ்சின் பந்து வீச்சில் சிக்சருக்கு முயற்சித்த போது கேட்ச் ஆகிப்போனார். இதனால் இந்திய அணியின் நிலைமை பரிதாபமானது. இதன் பின்னர் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தரும், அஸ்வினும் ஜோடி சேர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 74 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்தனர்.

வாஷிங்டன் சுந்தரும், அஷ்வினும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணிக்காக அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் டாம் பெஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய 321 ரன்கள் பின்தங்கியது. 241 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸை விளையாட உள்ளது.

Be the first to comment on "முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் சேர்ப்பு"

Leave a comment

Your email address will not be published.