முதல்ல இந்தியா பேட்டிங் பண்ணிருந்தா சம்பவம்தான்… நெஹ்ரா ஆவேசம்! ! !

முதல்ல இந்தியா பேட்டிங் பண்ணிருந்தா சம்பவம்தான்... நெஹ்ரா ஆவேசம்! ! !
முதல்ல இந்தியா பேட்டிங் பண்ணிருந்தா சம்பவம்தான்... நெஹ்ரா ஆவேசம்! ! !

இந்திய அணி முதலில் களமிறங்கியிருந்தால் நிச்சயம் வெற்றிபெற்றிருக்கும் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். இந்தியா டாஸ் வென்றால், விராட் கோலியும் 250 ரன்கள் எடுக்க முடியும் ‘என்கிறார் ஆஷிஷ் நெஹ்ரா …

சென்னையில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் குவித்தது. கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் விளாசினார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 337 ரன்களுக்கு தனது முதல் இன்னிங்ஸை முடித்துக்கொண்டது. இரண்டாவது இன்னிங்ஸை 241 ரன்கள் முன்னிலையுடன் துவங்கிய இங்கிலாந்து அணி 178 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆன நிலையில், இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது.

இந்திய அணி கேப்டன் விராட் கோலி 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் கடந்த வருடம் முழுவதும் சதமடிக்காத நிலையில் தற்போதும் சதத்தை நெருங்கி ஆட்டமிழந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், எஞ்சியுள்ள மூன்று டெஸ்ட்களில் விராட் கோலி சதமடிப்பாரா என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ராவிடம் கேட்டபோது, தடாலடியாக பதிலளித்துள்ளார். “முதல் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றிருந்தால், விராட் கோலி நிச்சயம் 250 ரன்கள் அடித்திருப்பார். இந்திய அணியும் வெற்றி வெற்றிபெற்றிருக்கும். ஆனால், அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி டாஸ் வெல்லும் பட்சத்தில் கோலி இரட்டை சதம் விளாச வாய்ப்புள்ளது. அஸ்வின் ஆட்டமிழந்தபிறகு இந்திய அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியானது. ஆனாலும், மறுமுனையில் இருந்த விராட் கோலி பதற்றமில்லாமல் ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். இதுதான் கோலி. எதிர்பாராத விதமாகத்தான் அவர் போல்ட் ஆனார். அந்தப் பந்தை யார் எதிர்கொண்டிருந்தாலும் அவுட் ஆகியிருப்பார்கள்” எனத் தெரிவித்தார் நெஹ்ரா.

மேலும் பேசிய நெஹ்ரா, “சென்னை மைதானம் முதல் மூன்று நாட்களுக்கு பேட்டிங்கிற்கும், எஞ்சிய நாட்களில் பந்துவீச்சுக்கும் சாதகமாக இருந்தது. அடுத்த டெஸ்டிலும் இதே நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கிறேன். இந்திய அணி டாஸ் வென்றால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்” எனக் கூறினார். இந்தியா, இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் சென்னையில் வருகிற 13ஆம் தேதி துவங்கவுள்ளது. இதில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு. கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது …

Be the first to comment on "முதல்ல இந்தியா பேட்டிங் பண்ணிருந்தா சம்பவம்தான்… நெஹ்ரா ஆவேசம்! ! !"

Leave a comment

Your email address will not be published.