இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி டெல்லியில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.
எட்டக்கூடிய இலக்கை துரத்திய தாஸ் (7) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். பின் இணைந்த நையிம், சவுமியா சர்கார் ஜோடி, இந்திய பவுலர்களை எளிதாக சமாளித்தனர்.
இப்போட்டியில் பவர் பிளேவில், இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, சுழற்பந்து வீச்சாளர்களை கையாளுவதில் கோட்டைவிட்டார் எனலாம். வங்கதேச அணி பேட்டிங் செய்த போது, பவர் பிளே எனப்படும் முதல் 6 ஓவரில் வங்கதேச அணியில் இரு இடது கைபேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்தனர்.
சீரான இடைவேளையில் அறிமுக வீரர் நையிம் பவுண்டரிகள் விளாசி அசத்தினார். இவர் 26 ரன்கள் எடுத்து சகால் சுழலில் சிக்கினார். தொடர்ந்து எதிர்முனையில் மிரட்டிய சவுமியா சர்காரை (39) கலீல் அஹமது போல்டாக்க, இந்திய அணி மீண்டும் போட்டிக்குள் வந்தது.
149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. அந்த அணியின் லித்தன் தாஸ், மொகமது நயீம் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
லித்தன் தாஸ் 7 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சர்க்கார் நயீமுடன் அதிரடியாக ஆடினார். இருவரும் இணைந்து 46 ரன்கள் சேர்த்த நிலையில் நயீம் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய முஷ்பிகுர் ரஹிம் சவுமியா சர்க்காருடன் இணைந்து பொறுப்புடன் ஆடினார். கிடைத்த பந்துகளில் ஒன்று, இரண்டு, பவுண்டரி என அடித்தனர். இந்த ஜோடி 62 ரன்கள் சேர்த்தபோது சவுமியா சர்க்கார் அவுட்டானார். சர்க்கார் 39 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அப்போது வங்காளதேசம் 18 பந்தில் 35 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இறுதியில், வங்காளதேசம் அணி 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முஷ்பிகுர் ரஹிம் அபாரமாக ஆடி அரை சதமடித்தார்.
இது இந்தியாவுக்கு எதிரான முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் டி 20 தொடரில் 1-0 என வங்காளதேசம் முன்னிலை வகிக்கிறது.
இந்த வெற்றியின் மூலம் சர்வதேச டி-20 அரங்கில் இந்திய அணிக்கு எதிராக வங்கதேச அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் வங்கதேச அணிக்கு எதிரான இந்திய அணியின் வெற்றி நடைக்கு (8 வெற்றிகள்) முற்றுப்புள்ளி வைத்தது.
Be the first to comment on "முதல்முறையாக இந்தியாவை தோற்கடித்தது வங்காளதேசம், முதல் டி 20 போட்டியில் வெற்றி"