மயங்க் அகர்வால் மரண அடி, மீண்டும் இரட்டை சதம் அடித்து அசத்தல்

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 150 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  முதல் நாளிலேயே சுருண்டது. இந்திய அணி சார்பில் முகமது சமி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் மற்றும் ரவிசந்திரன் அஷ்வின் உள்ளிட்டவர்கள் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

அதன் பின் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் களம் இறங்கினார்கள். ரோகித் சர்மா எதிர்பாரா வண்ணம் 6 ரன்களில் ஆட்டமிழக்க, புஜாரா மயங்குடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சேர்ந்து 91 பார்ட்னர்ஷிப் ரன்களை அடித்தனர். அரைச் சதத்தை கடந்த புஜாரா 54 ரன்களில் அபு ஜெயத் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதில் இந்திய தொடக்க பேட்ஸ்மேன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் 98 பந்தில் அரைசதம் அடித்தார். அற்புதமான இன்னிங்க்ஸை விளையாடிய மயங்க் அகர்வால் 184 பந்துகளில் சதம் அடித்தார். இது அவருடைய மூன்றாவது டெஸ்ட்  சதமாகும். மறுமுனையில் 105 பந்துகளில் தன்னுடைய 21வது டெஸ்ட் அரைச் சதத்தை அடித்தார் ரகானே. தொடர்ந்து சிறப்பாக முன்னேறிச் சென்று சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டபோது ரகானே 86 ரன்களில் அபு ஜெயத் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 183 பந்தில் சதத்தோடு நிற்காமல் சதத்தை இரட்டை சதமாக மாற்றினார்.

196 ரன்கள் எடுத்திருக்கும்போது சிக்சர் அடித்து இரட்டை சதத்தை பதிவு செய்தார். அவர் 303 பந்தில் 25 பவுண்டரி, 5 சிக்சருடன் இரட்டை சதம் அடித்தார்.இவர் ஏற்கனவே தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரட்டை சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இன்னிங்சில் 200 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இந்தியா உள்ளது.

அதன் பின் 6வது விக்கெட்டுக்கு ரவீந்திர ஜடேஜா களம் இறங்கினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயங்க் அகர்வால் இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 303 பந்துகளில் இந்த இரட்டை சதத்தை அடித்தார். இந்திய அணி வங்கதேச அணியை விட 200 ரன்களுக்கும் அதிகமான ரன்களோடு முன்னேறி வருகிறது. வங்கதேச அணி சார்பில் வீழ்த்தப்பட்ட நான்கு விக்கெட்டுகளையும் அபு ஜெயத்தே வீழ்த்தினார். 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்களுடன் வலுவான நிலையில் இந்தியா.

Be the first to comment on "மயங்க் அகர்வால் மரண அடி, மீண்டும் இரட்டை சதம் அடித்து அசத்தல்"

Leave a comment