மத்திய அரசின் கேல் ரத்னா விருதுக்கு அஸ்வின், மிதாலி ராஜ் பெயர் – பி.சி.சி.ஐ பரிந்துரை…

www.indcricketnews.com-indian-cricket-news-84

புதுடெல்லி, கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளுக்காக, பரிந்துரைப் பட்டியலை BCCI வெளியிட்டுள்ளது.விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகின்றது. இதன்படி 2017 ஜனவரி 1ஆம் தேதி முதல் 2020 டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு மேற்கண்ட விருதுகளுக்கு பெயா்களைப் பரிந்துரைக்குமாறு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அதன்படி பல்வேறு தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் வீரர், வீராங்கனைகள் பெயா்களை பரிந்துரைக்கிறது.   இதுதொடர்பாக பேட்டிகொடுத்த பிசிசிஐ நிர்வாகி, “கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலைத் தயாரிக்க பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றதாகவும். இதில் கேல் ரத்னா பிரிவில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் அஸ்வின், இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜையும், அர்ஜுனா விருதுக்காக  தவன், பும்ரா, ராகுல் ஆகியோரின் பெயர்களையும் இறுதி செய்தோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.இப்பரிந்துரைப் பட்டியலை ஜூன் 21ஆம் தேதியே சமர்ப்பித்திருக்க வேண்டுமெனவும், கொரோனா காரணமாகக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதாகவும். மற்ற விளையாட்டுப் பிரிவைச் சேர்ந்த பரிந்துரைப் பட்டியல் விரைவில் வெளியாகும் எனவும் கூறியிருக்கிறார்.தமிழ்நாட்டைச் சேர்ந்த 34 வயது அஸ்வின் 79 டெஸ்ட், 111 ஒருநாள், 46 டி20 ஆட்டங்களில் விளையாடியிருக்கிறார்.சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், அதிக விக்கெட்களை கைப்பற்றி பௌலர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின், 71 விக்கெட்களுடன் முதலிடம் பிடித்தார். பாட் கம்மின்ஸ் (70), ஸ்டூவர்ட் பிராட் (69) ஆகியோர் அடுத்த இரண்டு இடங்களைப் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ், உலக பெண்கள் கிரிக்கெட்டிற்கு அடையாளமாக விலங்குபவர். மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து தனது திறமையை பல முறை நிறுபித்திருக்கிறார். 38 வயது மிதாலி ராஜ் இதுவரை 11 டெஸ்டுகளிலும் 215 ஒருநாள், 89 டி20 ஆட்டங்களிலும் விளையாடியிருக்கிறார். அண்மையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது 56-வது அரை சதத்தை மிதாலி ராஜ் பதிவு செய்திருக்கிறார்.

முன்னதாக மணிகா பத்ரா, ரோகித் சர்மா, வினேஷ் போகாத், ராணி ராம்பால் மற்றும் மரியப்பன் தங்கவேலு ஆகியோருக்கு கடந்த ஆண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு தான் முதல் முறையாக ஒரே ஆண்டில் 5 பேருக்கு கேல்ரத்னா விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "மத்திய அரசின் கேல் ரத்னா விருதுக்கு அஸ்வின், மிதாலி ராஜ் பெயர் – பி.சி.சி.ஐ பரிந்துரை…"

Leave a comment

Your email address will not be published.


*