மகளிர் 2வது டி20 போட்டியில் இங்கிலாந்தை வென்றது இந்தியா

www.indcricketnews.com-indian-cricket-news-122


பவுலிங்கில் கலக்கிய இந்திய வராீ ங்கனை தீப்தி ஷர்மாவுக்கு ஆட்ட
நாயகி விருது விருதை பெற்றார். 3 போட்டிகள் கொண்ட இந்த தொடர்
தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ள நிலையில் கடைசி
ஆட்டம் நாளை தொடங்கவுள்ளது. இறுதியில் எந்த அணி வெல்லும்
என்பதைக் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இரு
அணியினரும் வெற்றி இலக்கை நோக்கி விளையாடுவார்கள் என்பதில்
ஐயமில்லை எனினும் கடந்த முறை டெஸ்ட் தொடரில் இறுதி ஆட்டத்தில்
மட்டுமே இந்தியா வென்றது எனவே இத்தொடைக் வென்றால் மட்டுமே
இந்திய மகளிர் அணிக்கும் பெருமை. எனவே, இறுதி ஆட்டத்தில் இந்திய
அணி தனது சிறப்பான ஆட்டத்தைெ வெளிப்படுத்த வேண்டிய நிலையில்
உள்ளது.

இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தொடங்க விரும்பினார்கள்.எனவே, முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் மட்டுமே கொடுத்து 148 ரன்களை சேர்த்து எதிரணிக்கு இலக்கை நிர்ணயிதார்கள்.

அதிகபட்சமாக ஷபாலி வர்மா (48 ரன்கள், 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) , ஹர்மன்பிரீத் கவுர் (31) ரன்கள், தீப்தி ஷர்மா (24) ரன்களும் சேர்த்தார்கள். இதையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இங்கிலாந்து அணிக்கு பெரிய மலையாகத் தெரியவில்லை என்றாலும் தொடரை 2 வது முறை வெல்ல வேண்டுமென்ற நோக்கத்துடன் எதிரணி களமிறங்கியது.

இங்கிலாந்து அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவரில் 8 விக்கெட்டுகள் அடுத்தடுத்து மலைபோல சரிந்தன, ஏனெனில் இந்திய அணியின் பந்து வீச்சை அபாரமாக அமைந்தது. இறுதியில் 20 ஓவரில் 140 ரன்கள் மட்டுமே இங்கிலாந்து மகளிர் அணியால் எடுக்க முடிந்தது.

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான பியூமெண்ட் மட்டும் அரை சதமடித்து (59) ரன்னில் விக்கெட்டை இழந்தார். கேப்டன் ஹதீ ர் நைட் (30) ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இதன் மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி சிறப்பாக விளையாடி வெற்றியை கைப்பற்றியது. இத்தொடரில், இந்தியா சார்பில் பூனம் ஷர்மா (2) விக்கெட்டுகளையும் அருந்ததி ரெட்டி, தீப்தி ஷர்மா இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள். இந்த வெற்றியின் மூலம் 1-1 என தொடரை சமன்செய்து வெற்றியைப் பெற்றது இந்திய அணி. இத்தொடரில், இங்கிலாந்து அணிக்கு எதிராக பேட்டிங், பீல்டிங், பவுலிங்கில் கலக்கிய இந்திய வராீ ங்கனை தீப்தி ஷர்மாவுக்கு ஆட்ட நாயகி விருது விருதை பெற்றார். 3 போட்டிகள் கொண்ட இந்த தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ள நிலையில் கடைசி ஆட்டம் நாளை தொடங்கவுள்ளது. இறுதியில் எந்த அணி வெல்லும் என்பதைக் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

இரு அணியினரும் வெற்றி இலக்கை நோக்கி விளையாடுவார்கள் என்பதில் ஐயமில்லை எனினும் கடந்த முறை டெஸ்ட் தொடரில் இறுதி ஆட்டத்தில் மட்டுமே இந்தியா வென்றது எனவே இத்தொடைக் வென்றால் மட்டுமே இந்திய மகளிர் அணிக்கும் பெருமை. எனவே, இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது.

Be the first to comment on "மகளிர் 2வது டி20 போட்டியில் இங்கிலாந்தை வென்றது இந்தியா"

Leave a comment