மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப்போட்டியில் இடம்பிடிக்க  வாய்ப்புள்ளது.

www.indcricketnews.com-indian-cricket-news-10034414
Yastika Bhatia of Mumbai Indians is bowled by Anjali Sarvani of UP Warriorz during match fifteen of the Tata Women’s Premier League between the Mumbai Indians and the UP Warriorz held at the Dr. DY Patil Sports Academy, Navi Mumbai on the 18th March 2023 Photo by: Ron Gaunt / SPORTZPICS for WPL

மும்பை: மகளிருக்கான முதலாவது பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் ஆகிய 5 அணிகள் இடம்பெற்று விளையாடி வருகின்றன. மேலும் நடந்துமுடிந்த லீக் ஆட்டத்தில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை விளையாடின. கடந்த மார்ச் 4ஆம் தேதியன்று தொடங்கிய இந்த லீக் சுற்று மார்ச் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

மார்ச் 21ஆம் தேதியன்று நடந்த இந்த கடைசி லீக் சுற்றில் உ.பி. வாரியர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கிய மும்பை அணி 16.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

அதேபோல உ.பி. வாரியர்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கிய டெல்லி அணி 17.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெறற்பெற்றது. இந்த லீக் சுற்றின் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் தலா 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளன. ஆனால் ரன் ரேட்டின் அடிப்படையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டதால் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

எனவே இரண்டாவது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தை பெற்றுள்ள உ.பி.வாரியர்ஸ் அணியுடன் `பிளே ஆப்’ சுற்றில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் ஜெயின்ட்ஸ் அணிகள் தலா 2 வெற்றி, 6 தோல்வியுடன் 4 புள்ளிகளை பெற்று ரன் ரேட் அடிப்படையில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தை பெற்றதன் மூலம் தொடரைவிட்டு வெளியேறின.

இந்நிலையில் 2 நாட்கள் ஓய்வுக்கு நடைபெறவுள்ள எலிமினேட்டர் போட்டி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் மார்ச் 24ஆம் தேதியான இன்று இரவு 7.30 மணியளவில் நடைபெறவுள்ளது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் உ.பி. வாரியர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவிருக்கும் இப்போட்டியில் வெற்றி பெறும் அணி, வருகின்ற மார்ச் 26ஆம் தேதியன்று மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

இதனால் வெற்றிக்காக மும்பை இந்தியன்ஸ் மற்றும் உ.பி. வாரியர்ஸ் அணிகள் கடுமையாக போராடும் என்பதால், நாளைய ஆட்டம் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Be the first to comment on "மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப்போட்டியில் இடம்பிடிக்க  வாய்ப்புள்ளது."

Leave a comment

Your email address will not be published.


*