பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கத்தின் சிறந்த வீரர் விருது

இங்கிலாந்து தொழில்முறை கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கம் சார்பில் வருடந்தோறும் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. 

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ்க்கு கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கத்தின் சிறந்த வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து தொழில்முறை கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கம் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்.

இந்த நிலையில், நேற்று (03) லண்டனில் நடைபெற்ற தொழில்சார் கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் 50 ஆவது விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய பென் ஸ்டோக்ஸ், “இந்த விருதுகள் அனைத்தையும் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு காலம் வரும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அது மிக விரைவில், அதுவும் நான் ஓய்வு பெறுவதற்கு முன் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. அதில் உலகக் கிண்ணத்தை வென்றது ஒரு பகுதியாக இருப்பது ஒரு ஆச்சரியமான உணர்வாக உள்ளது. அத்துடன், ஏழு வாரங்கள் கடின உழைப்பு பின்னர் உலகக் கிண்ணத்தை வென்ற கையோடு ஆஷஸ் தொடரிலும் பிரகாசிக்க முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது” என தெரிவித்தார் பென் ஸ்டோக்ஸ். 

பென் ஸ்டோக்ஸ் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்டில், பென் ஸ்டோக்ஸ் மரண ஆட்டம் கைகொடுக்க, இங்கிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் ‘திகில்’ வெற்றி பெற்றது.

இவரை பெறுமைப்படுத்தும் விதமாக இங்கிலாந்து உயரிய ‘நைட் ஹூட்’ விருது வழங்கப்படும் என எதிர்பாரக்கப்படுகிறது. ‘நைட் ஹூட்’ விருதினை இங்கிலாந்தின் அரசர்கள் அல்லது ராணி வழங்குவார்கள். இதற்கு முன் 11 இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் இந்த விருதினை பெற்றுள்ளனர். கடைசியாக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆலிஸ்டர் குக் இந்த விருதை பெற்றிந்தார். இந்த விருதை பெற்றவர்கள் மிஸ்டர் என்பதற்கு பதிலாக சர் என எழுதுவார்கள்.

அதேபோல் ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்டில் 135 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் பென் ஸ்டோக்ஸ். இதனால் கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கம் இந்த ஆண்டின் சிறந்த வீரர் விருதை பென் ஸ்டோக்ஸ்க்கு வழங்கி கவுரவித்துள்ளது.

கோடைக்கால ஒருநாள் கிரிக்கெட் வீரராக கிறிஸ் வோக்ஸும், டெஸ்ட் வீரராக ஸ்டூவர்ட் பிராட்டும், கவுன்ட் சாம்பியன்ஷிப் வீரராக ஹர்மரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Be the first to comment on "பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கத்தின் சிறந்த வீரர் விருது"

Leave a comment

Your email address will not be published.


*