பெண்கள் டி20 சேலஞ்ச் – முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனை வீழ்த்தி வெலோசிட்டி த்ரில் வெற்றி

சார்ஜாவில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணி, மிதாலிராஜ் தலைமையிலான வெலோசிட்டியை
எதிர்கொண்டது. கடந்த ஆண்டு இறுதி ஆட்டத்தில் நோவாஸ் அணியிடம் அடைந்த தோல்விக்கு வெலோசிட்டி பழிதீர்க்கும் முனைப்புடன் உள்ளது. வெலோசிட்டி அணியில் 16 வயதான நட்சத்திர வீராங்கனை ஷபாலி வர்மா இடம் பெற்றிருப்பது அந்த அணிக்கு பலமாகும். இந்திய வீராங்கனைகள் மட்டுமின்றி வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை, தென்ஆப்பிரிக்கா போன்ற வெளிநாட்டு வீராங்கனைகளும் அங்கம் வகிக்கிறார்கள். பெண்கள் பிக்பாஷ் கிரிக்கெட் போட்டி நடந்து வருவதால் இந்த முறை ஆஸ்திரேலிய வீராங்கனைகள் வரவில்லை.

கொரோனா பரவலால் கடந்த பிப்ரவரி-மார்ச் மாதத்துக்கு பிறகு எந்த சர்வதேச போட்டிகளிலும் விளையாடாத இந்திய வீராங்கனைகளின் உடல்தகுதி எந்த அளவுக்கு இருக்கிறது, ஆட்டத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார்கள் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். டிரைல்பிளாசர்ஸ் அணியில் கேப்டன் ஸ்மிர்தி மந்தனா, ஜூலன் கோஸ்வாமி, தீப்தி ஷர்மா, டியாந்த்ரா டோட்டின் உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய சூப்பர் நோவாஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அட்டப்பட்டு 44 ரன்களையும், கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 31 ரன்களையும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் பெரிதாக சோபிக்க வில்லை. வெலோசிட்டி தரப்பில் அசத்தலாக பந்துவீசிய ஏக்தா பிஸ்த் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆலம், காஸ்பெரக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வெலோசிட்டி அணிக்கு துவக்கமே மோசமாக அமைந்தது. டேனியல் வாட், சஃபாலி வர்மா, கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் அந்த அணி 38 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் வந்த வேதா கிருஷ்ணமூர்த்தி, சுஷ்மா வர்மா ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வேதா கிருஷ்ணமூர்த்தி 29 ரன்கள் எடுத்திருந்த நிலையிலும், சுஷ்மா வர்மா 34 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் வெலோசிட்டி அணி சரிவை சந்தித்தது. இறுதியில் சுனே லஸ் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். வெலோசிட்டி அணி 1 பந்து மீதமிருந்த நிலையில், இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் கடந்த ஆண்டு இறுதி ஆட்டத்தில் நோவாஸ் அணியிடம் அடைந்த தோல்விக்கு வெலோசிட்டி பழிதீர்த்து கொண்டது.

Be the first to comment on "பெண்கள் டி20 சேலஞ்ச் – முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனை வீழ்த்தி வெலோசிட்டி த்ரில் வெற்றி"

Leave a comment

Your email address will not be published.