பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு முதல் வெற்றி

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 191 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பூனம் ராவத் 77 ரன்னும், ஹர்மன்பிரீத் கவு 46 ரன்னும், கேப்டன் மிதாலிராஜ் 40 ரன்னும் எடுத்தனர்.

அடுத்து 192 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியினரின் பந்து வீச்சில் சுருண்டனர். 50 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 138 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆகி 53 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கேம்பெல் 39 ஸ்டபானிஸ் டெய்லர் 20 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர்.

முதல் போட்டியில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்டெபானி டெய்லர் 94 ரன்னும் (8 பவுண்டரி, 2 சிக்சர்), நடாஷா மெக்லின் 51 ரன்னும் விளாசினர்.அடுத்து 226 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுக்கு 170 ரன்களுடன் (39.2 ஓவர்) நல்ல நிலையில் இருந்தது.பரபரப்பான கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவை என்ற நிலையில் இறுதி ஓவரை வீசிய சுழற்பந்து வீச்சாளர் அனிசா முகமது முதல் பந்தில் எக்தா பிஸ்த் (0) விக்கெட்டையும், கடைசி பந்தில் பூனம் யாதவ் (0) விக்கெட்டையும் வீழ்த்தி திரிலிங்கான ஆட்டத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்காட்டினார்.50 ஓவர்களில் இந்திய அணி 224 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆகி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பூனியா 75 ரன்னும், ரோட்ரிக்ஸ் 41 ரன்னும் எடுத்தனர். ராஜ் 20 ரன்னில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் பவுலர் அனிசா முகமது 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-1 என்ற கணக்கில் சமனிலை வகிக்கிறது. 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இதே மைதானத்தில் நாளை மறுதினம் நடக்கிறது.

Be the first to comment on "பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு முதல் வெற்றி"

Leave a comment