பும்ராவுக்கு விரைவில் டும் டும்: எப்போது தெரியுமா?

Bumrah exempted from the final Test match to prepare for his wedding
Bumrah exempted from the final Test match to prepare for his wedding

இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பரீத் பும்ராவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இது முடிந்ததும் மார்ச் 12ஆம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமாகும். இதற்காக, அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பரீத் பும்ராவின் பெயர் இடம்பெறவில்லை. மேலும், ஒருநாள் தொடரிலும் எனக்கு ஓய்வு வேண்டும் என பிசிசிஐயிடம் பும்ரா கோரிக்கை வைத்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

இதற்கான காரணம் குறித்து பிசிசிஐ நிர்வாகியிடம் கேட்டபோது, “பும்ராவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இதற்காகத்தான் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஓய்வு கேட்டுள்ளார். டி20 தொடரிலும் அவரின் விருப்பத்தின் பெயரில்தான் அணியிலிருந்து விடுவித்தோம்” எனத் தெரிவித்தார். திருமணம் தொடர்பான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் போது திருமணம் நடைபெறும் என்பது மட்டுமே தற்போது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, மணப்பெண் குறித்த தகவல் ரகசியம் காக்கப்படுகிறது. திருமண தேதி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளில் பும்ரா இரண்டில் மட்டுமே பங்கேற்றார். சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் களமிறங்கிய இவர், நான்கு விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்களை சாய்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது போட்டியில் இவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. மூன்றாவது போட்டியில் களமிறங்கிய பும்ரா, ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை. மைதானம் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருந்ததால் அக்ஷர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின் இருவர் மட்டும் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசி இந்திய அணிக்கு 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்துக்கு எதிரான எதிர்வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 ஐ தொடரில் பும்ராவுக்கு ஏற்கனவே ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது, நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் மார்ச் 4 ஆம் தேதி தொடங்க உள்ளது. ஒரு வெற்றி அல்லது சமநிலை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் இடத்தைப் பாதுகாக்கும். நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, நாளை நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "பும்ராவுக்கு விரைவில் டும் டும்: எப்போது தெரியுமா?"

Leave a comment