பும்ராவுக்கு எதிரான நியூசிலாந்து அணியின் அணுகுமுறையை மற்ற அணிகளும் பின்பற்றும்: ஷேன் பாண்ட்

பும்ராவுக்கு எதிராக நியூசிலாந்து அணி கடைபிடித்த எச்சரிக்கையுடன் விளையாடும் அணுகுமுறையை மற்ற அணிகளும் பின்பற்றும் என ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா உலகின் தலைசிறந்த வீரராக திகழ்ந்தார். இவரது பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது என்பதை பேட்ஸ்மேன்களால் புரிந்து கொள்ள முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில் நியூசிலாந்து தொடரின்போது பும்ரா பந்தை அடித்து விளையாடாமல் எச்சரிக்கையுடன் எதிர்கொள்ளும் அணுமுறையை பேட்ஸ்மேன்கள் கடைபிடித்தனர். இதனால் நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் பும்ரா ஏமாற்றம் அடைந்தார்.

இந்நிலையில் இந்த அணுகுமுறையை மற்ற அணிகளும் கடைபிடிக்கும் என நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷேன் பாண்ட் கூறுகையில் ‘‘நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் பும்ராவை எதிர்த்து சிறப்பாக விளையாடினார் என்று நினைக்கிறேன். அவர்கள் பும்ராவை மிகவும் எச்சரிக்கையுடன் விளையாடினார்கள். அதேவேளையில் அனுபவம் இல்லாத (நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர்) வேகப்பந்து வீச்சாளர்களும் அணியில் இருந்தனர். பும்ராவின் கடினமான டெலிவரியை கண்டுபிடித்தனர்.

மற்ற அணிகளும் பும்ராவின் கடினமான டெலிவரியை தற்போது கண்டுபிடித்தால், மற்ற பந்து வீச்சாளர்கள் மீது தாக்குதல் நடத்தலாம். பந்து வீச்சாளர்கள் ஒரு குரூப்பாக செயல்படுவது அவசியம். ஆடுகளம் பிளாட்டாக இருக்கும்போது பந்து வீசுவது எளிதானது அல்ல. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பும்ரா சிறப்பாகத்தான் பந்து வீசினார். இருந்தாலும் அவரால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை.

டெஸ்ட் தொடரில் பும்ரா மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவார். இதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை’’ என்றார்.

விராட் கோலி விக்கெட்டை வீழ்த்த வேண்டும் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட். இடது கை பவுலர் ஆன இவர் பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்டில் விளையாடிய டிரென்ட் போல்டுக்கு கையில் முறிவு ஏற்பட்டது.

இதனால் இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெறவில்லை. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 21-ந்தேதி வெலிங்டனில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட டிரென்ட் போல்ட் உடற்தகுதி பெற்றுள்ளார். இந்நிலையில் விராட் கோலி விக்கெட்டை வீழ்த்துவதற்காக காத்திருக்க முடியாது என்று முதல் டெஸ்டில் விளையாட இருக்கும் டிரென்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "பும்ராவுக்கு எதிரான நியூசிலாந்து அணியின் அணுகுமுறையை மற்ற அணிகளும் பின்பற்றும்: ஷேன் பாண்ட்"

Leave a comment

Your email address will not be published.


*