பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி, டென்மார்க் ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார்

சமீபத்தில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்து, டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் 2 வது சுற்றில் தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டென்மார்க் ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து இரண்டாவது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் ஒடேன்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து தென் கொரியாவின் அன் சே யங்கை எதிர்கொண்டார்.

இதில் பிவி சிந்து 14-21, 17-21 என நேர்செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் டென்மார்க் ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார்.

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் ஒடேன்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சிந்து இந்தோனேசியாவின் கிரேகோரியா மரிஸ்காவை எதிர்கொண்டார்.

இதில் சிந்து 22-20, 21-18 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற பிவி சிந்துவுக்கு 38 நிமிடங்களே தேவைப்பட்டது. கிரேகோரியா மரிஸ்காவுக்கு எதிராக மோதியுள்ள ஐந்து போட்டிகளிலும் சிந்து வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


முதல் செட்டில் சாய்னாவும் ஜப்பான் வீராங்கனையும் ஒரு கட்டத்தில் 7-7 என சமநிலையில் இருந்தனர். அதன்பின் ஜப்பான் வீராங்கனை தகாஹாஷி 11-8 என முன்னிலைப் பெற்றார். இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் தகாஹாஷி சாய்னாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். அவரது நெருக்கடியை சாய்னாவால் எதிர்கொள்ள முடியவில்லை.


2-வது செட்டிலும் இடைவேளை வரை இழுபறியாகவே சென்றது. மற்றும் தகாஹாஷி 11-9 என முன்னிலைப் பெற்றிருந்தார். தகாஹாஷி 15-10 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் தகாஹாஷி 15-13 என முன்னிலைப் பெற்ற பிறகு, ஆட்டம் 20-20 என சமன் பெற்றது. இறுதியில் தகாஹாஷி 23-21 என வெற்றி பெற்றார்.

தகாஹசிக்கு எதிராக 6 முறை மோதியுள்ள சாய்னா அதில் சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சமீர் வர்மா (இந்தியா) 21-11, 21-11 என்ற நேர் செட் கணக்கில் கன்டா சுனியாமாவை (ஜப்பான்) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அதே சமயம் இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் 14-21, 18-21 என்ற நேர் செட் கணக்கில் ஆன்டோசெனிடம் (டென்மார்க்) தோல்வியை தழுவினார்.

 

Be the first to comment on "பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி, டென்மார்க் ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார்"

Leave a comment

Your email address will not be published.


*