பிரித்வி ஷா சொதப்பியது குறித்து கவாஸ்கர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

பிரித்வி ஷா சொதப்பியது குறித்து கவாஸ்கர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

பிரித்வி ஷாவுக்கு போதுமான வாய்ப்பு கொடுத்தும், அவர் மேம்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. எதிர்வரும் டெஸ்ட் போட்டியில் அவரை நீக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அடிலைடில் நடைபெற்ற முதல் டெஸ்ட் (பகலிரவு) போட்டியில் துவக்க வீரர் பிரித்வி ஷா, முதல் இன்னிங்ஸில் ரன்கள் எதுவும் எடுக்காமலும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 ரன்கள் சேர்த்தும் அவுட் ஆனார். ஆஃப் ஸ்டெம்பிற்கு நேராக வரும் பந்துகளை அடிக்க திணறியதால், ஆஸ்திரேலிய பௌலர்கள் அதைக் கணித்து, அதற்கேற்றாற்போல் பந்துவீசி விக்கெட்டை வீழ்த்தினர். இவர் ஐபிஎல் தொடரிலும், பயிற்சி டெஸ்ட் போட்டியிலும் (0, 19, 40, 3) சொதப்பாலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

ஆனாலும், பகலிரவு டெஸ்ட் போட்டி XI அணியில் இடம் கிடைத்தது. கே.ராகுல், ஷுப்மன் கில் போன்ற துவக்க வீரர்கள் நீக்கப்பட்டிருந்தனர். ஷுப்மன் கில் பயிற்சி டெஸ்ட் போட்டியில் 0, 29, 43, 65 என ஓரளவுக்குச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் சொதப்பலாக விளையாடிய பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு கொடுத்து அணி நிர்வாகம் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

இதுகுறித்து கிரிக்கெட் விமர்சகர் விக்ரந்த் குப்தா வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்றில், சுனில் கவாஸ்கர் கூறிய கருத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், “பிரித்வி ஷா பேட்டிங்கில் சில பிரச்சனைகள் உள்ளன. அடுத்த டெஸ்ட் போட்டியில் அவரை நீக்க வேண்டும்” எனப் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடிலைடில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 244/10, ஆஸ்திரேலிய அணி 191/10 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து 53 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணி 36 ரன்களுக்கு சுருண்டது.

அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே எடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு 90 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தனர். இதனால், ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

ஷாவுக்கு தொழில்நுட்ப சிக்கல் இருப்பதாகவும், அடுத்த டெஸ்டில் விளையாடக்கூடாது என்றும் கவாஸ்கர் கூறியதாக கிரிக்கெட் பத்திரிகையாளர் விக்ராந்த் குப்தா தெரிவித்துள்ளார் !!!

தனது ட்வீட்டில், கவாஸ்கர் கில் இன்னிங்ஸைத் திறக்க விரும்புகிறார் என்றும் எழுதினார்: “பிருத்விக்கு தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளன, அடுத்த டெஸ்டில் கைவிடப்பட வேண்டும்” – சன்னி பாய் தனது மாநில பஞ்சாபிற்காக திறந்தால் சுப்மான் திறக்க விரும்புகிறார் !!!

Be the first to comment on "பிரித்வி ஷா சொதப்பியது குறித்து கவாஸ்கர் கருத்துத் தெரிவித்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.