பிசிசிஐ வைத்த கோரிக்கைக்கு இங்கிலாந்து பச்சைக்கொடி.. இனி பிரச்னையே இல்லை…

இந்திய வீரர்களுக்காக பிசிசிஐ வைத்திருந்த கோரிக்கைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. ஐபிஎல் தொடர் தடைபட்டதை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி பக்கம் திரும்பியுள்ளது.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் இப்படி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் மைதானத்தில் வரும் ஜூன் 18ம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய வீரர்கள் அனைவரும் ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து புறப்படுகின்றனர்.

ஐபிஎல் தொடரில் நடந்த கொரோன பிரச்னை எதுவும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் நடந்துவிடக்கூடாது என்பதில் பிசிசிஐ தெளிவாக உள்ளது. இதனால் இங்கிலாந்து புறப்படுவதற்கு முன்னதாகவே இந்திய வீரர்கள் அனைவரும் 14 நாட்கள் பிசிசிஐ-ன் குவாரண்டைனில் வைக்கப்படவுள்ளனர். இந்த குவாரண்டைனின் போது எந்தவித பயிற்சிக்கும் அனுமதி இல்லை. இதற்காக கடந்த 19ம் தேதி வீரர்கள் மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தனர்.

இதன்பின்னர் ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தவுடன் அங்கும் 10 நாட்கள் குவாரண்டைனில் வீரர்கள் இருக்க வேண்டும். அந்த 10 நாட்கள் முடிந்தவுடன் தான் இந்திய வீரர்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி போன்ற முக்கிய ஆட்டங்களில் அணி வீரர்கள் மிக தாமதாக பயிற்சி தொடங்குவது பின்னடைவாக பார்க்கப்பட்டது.

இதன் காரணமாக பிசிசிஐ சார்பில் இங்கிலாந்து வாரியத்திற்கு கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டது. அதில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து அணி ஏற்கனவே இங்கிலாந்து அணியுடன் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடி பயிற்சி மேற்கொள்ளவுள்ளது. ஆனால் இந்திய அணி ஒரு வாரம் கூட பயிற்சிக்கு காலம் கிடைக்காது. எனவே இங்கிலாந்தில் குவாரண்டைனில் காலத்தில் பயிற்சிக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என கோரப்பட்டது.

இந்நிலையில் அதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்துள்ளது. இந்திய வீரர்கள் தங்களது குவாரண்டைனில் 3 நாட்கள் மட்டும் ஹோட்டல் அறையிலேயே இருக்க வேண்டும். அதன் பிறகு அறையை விட்டு வெளியே வந்து பயிற்சியை மேற்கொள்ளலாம் எனக்கூறப்பட்டுள்ளது. இதனால் இந்திய வீரர்களுக்கு கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேல் பயிற்சிக்கு கால அவகாசம் கிடைக்கும்.

இந்திய அணி நியூசிலாந்துடனான போட்டியை முடித்துவிட்டு இங்கிலாந்து அணியுடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்த தொடர் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கி செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் ட்ரெண்ட் ப்ரிட்ஜ், ஓல்ட் டிராவார்ட், ஹெட்டிங்லே, கென்னிங்டன் ஓவல் ஆகிய மைதானங்களில் அரங்கேறுகிறது.

Be the first to comment on "பிசிசிஐ வைத்த கோரிக்கைக்கு இங்கிலாந்து பச்சைக்கொடி.. இனி பிரச்னையே இல்லை…"

Leave a comment

Your email address will not be published.


*