பிசிசிஐ தலைவர் கங்குலியின் முயற்சி வெற்றி முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட்

ரசிகர்களுக்கு டெஸ்ட் போட்டியின் மீதான ஆர்வம் குறைந்து வருவதை தடுக்கும் வகையில் ஆஸ்திரேலியா, பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த முடிவு செய்தது. அதன்படி நியூசிலாந்துக்கு எதிராக முதன்முறையாக பகல்-இரவு போட்டியை நடத்தி காட்டியது.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்று விளையாடும்போது ஒரு போட்டியை பகல்-இரவு போட்டியாக நடத்த ஆஸ்திரேலியா விரும்பியது. ஆனால், இந்திய அணி பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு தயராகவில்லை என பிசிசிஐ அவர்களது கோரிக்கையை நிராகரித்தது.

இந்த நிலையில் பகல்-இரவு டெஸ்டில் விளையாட வேண்டும் என்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை வங்காதேச கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது.

பகல்-இரவு டெஸ்ட் போட்டி மின்னொளியின் கீழ் நடப்பதால் இதற்கு என்று பிரத்யேகமான இளஞ்சிவப்பு நிற பந்து (பிங்க்) பயன்படுத்தப்படுகிறது. டெஸ்ட் போட்டியை காண வரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்ய வேண்டும்,

இதுவரை 11 பகல்-இரவு டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் விளையாடியுள்ளன.

மின்னொளி டெஸ்டில் பந்து பழசான பிறகு அதை துல்லியமாக கணித்து விளையாடுவதில் பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கும். இதனால் தான் இந்திய வீரர்கள் தயக்கம் காட்டினர். இப்போது கங்குலியின் முயற்சியால் இந்திய மண்ணில் பகல்-இரவு டெஸ்ட் போட்டி சாத்தியமாகியுள்ளது.

நான் ஏற்கனவே தென்ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக இருந்த போது இளஞ்சிவப்பு நிற பந்தில் அந்த அணி விளையாடி இருக்கிறது. எனக்கு கிடைத்த அந்த அனுபவம் வங்காளதேச அணிக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.

பகல்-இரவு டெஸ்ட் போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும். இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில், ‘இளஞ்சிவப்பு நிற பந்தில் விளையாடுவதை வங்காளதேச கிரிக்கெட் வாரியம் உறுதி செய்திருப்பது நல்ல முன்னேற்றம். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பகல்-இரவு போட்டி அவசியமாகும். இதன் மூலம் இப்போட்டியை பார்க்க நிறைய ரசிகர்களை மைதானத்திற்கு வருகை தருவார்கள் என்று நம்புகிறேன்.

எனவே இரவில் பனிப்பொழிவின் தாக்கம் இருக்கும். அதனால் சுழற்பந்து வீச்சாளர்கள் சிரமப்படுவார்கள் என்று சொல்கிறீர்கள். ‘ஸ்பிரே’ அடித்து பனிப்பொழிவின் தாக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்வோம். ஏற்கனவே ஒரு நாள் போட்டியின் போது ‘ஸ்பிரே’ பயன்படுத்தி இருக்கிறோம். முதலாவது டெஸ்டில் எஸ்.ஜி. வகை பந்து பயன்படுத்துகிறோம். எனவே 2-வது டெஸ்டுக்கும் அதே வகை பந்து தான் பயன்படுத்தப்படும்.’ என்றார்.

Be the first to comment on "பிசிசிஐ தலைவர் கங்குலியின் முயற்சி வெற்றி முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட்"

Leave a comment

Your email address will not be published.


*