பிசிசிஐ தலைவராக ஒருமனதாக தேர்வாகும் ‘தாதா’ கங்குலி!

முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி பி.சி.சி.ஐ.யின் புதிய தலைவருக்கான வேட்பாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் மும்பையில் உள்ள ஹோட்டலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகளாக யாரைத் தேர்வு செய்வது என விரிவாக விவாதிக்கப்பட்டது.

முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவரான சீனிவாசன் பிரிஜேஷ் படேலை முன்மொழிந்தார். ஆனால், அவரை பெரும்பாலான கிரிக்கெட் சங்கங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிகிறது. இறுதியில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியைத் பி.சி.சி.ஐ. தலைவராக்குவது என முடிவுசெய்யப்பட்டது.

பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வு வருகின்ற 27-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், புதிய நிர்வாகிகள் பதவிக்கு போட்டியிட விரும்புவோருக்கான மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. தலைவர் பதவிக்கு முன்னாள் வீரர்களான கங்குலி மற்றும் பிரிஜேஷ் படேல் இடையே கடும் போட்டி நிலவியது.

இன்று பேசிய பி.சி.சி.ஐயின் இடைக்காலத் தலைவராக இருக்கும் சி.கே.கண்ணா, பி.சி.சி.ஐயின் தலைவராக சவுரவ் கங்குலியை நியமிக்கும் முடிவை வரவேற்கிறேன்’ என்று தெரிவித்தார். இதுகுறித்து பேசிய சவுரவ் கங்குலி, ‘பி.சி.சி.ஐக்கு தலைவராவது மிகவும் மகிழ்வானது.


பி.சி.சி.ஐயின் தலைவராக நான் பொறுப்பேற்கும் நேரத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பி.சி.சி.ஐ நல்ல நிலையில் இல்லை. அதனுடைய மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. ஏதாவது நல்ல விஷயம் செய்வதற்கு சிறந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது’ என்று தெரிவித்தார்.

 இந்திய கிரிக்கெட் போர்டின் தலைவராக முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே போல கர்னாடகாவின் பிரிஜேஷ் ஐபிஎல்., கவுன்சில் தலைவராகவும், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா செயலாளராகவும், இமாச்சல பிரதேசத்தின் அருண் சிங் தாகூர் பொருளாளராகவும் நியமிக்கப்படள்ளதாக தெரிகிறது.

கடந்த ஜனவரி 2017ல் லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த தவறியதால், பிசிசிஐ ., தலைவர் பொறுப்பில் இருந்து அனுராக் தாகூர் நீக்கப்பட்டார். அதேபோல ஐசிசி.,யில் பிசிசிஐ., சார்பில் யார் அங்கம்வகிப்பார் என்ற முக்கியமான முடிவும் விரைவில் எடுக்கப்படும் என தெரிகிறது.

வெளிநாடுகளிலும் இந்தியாவால் டெஸ்ட் போட்டிகளில் வெல்லமுடியும் என்ற நம்பிக்கை முன்னாள் இந்திய கேப்டன் செளரவ் கங்குலி கேப்டனாக ஆனபிறகே துளிர்விட்டது. குறிப்பாக 2003-04 ஆஸ்திரேலியா தொடர், 2004 பாகிஸ்தான் தொடர், 2002 இங்கிலாந்து தொடர் ஆகியவை அணிக்கு மிகவும் சவாலாக இருந்தாலும் இந்திய அணி இந்த தொடர்களில் வெற்றிகளை குவித்ததில், அணியின் இளம் வீரர்களை முன்னிறுத்தியதில் கங்குலியின் தலைமை பலரின் பாராட்டுகளை பெற்றது.

Be the first to comment on "பிசிசிஐ தலைவராக ஒருமனதாக தேர்வாகும் ‘தாதா’ கங்குலி!"

Leave a comment

Your email address will not be published.


*