பாண்ட்யாவின் பயிற்சியாட்டம் குறித்து சூர்யகுமார் கூறிய தகவல்…

www.indcricketnews.com-indian-cricket-news-103

கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான தொடருக்காக பாண்ட்யா-வின் பந்துவீச்சு மிகவும் அருமையாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா ஏ அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுவதாகயிருக்கிறது.இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி வரும் ஜூலை 13ம் தேதி தொடங்கவிருக்கிறது என உறுதிசெய்யப்பட்டுள்ளது.இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக, இந்திய அணியின் வீரர்கள் நேற்று இண்ட்ரா ஸ்குவாட் பயிற்சி போட்டியில் ஈடுபட்டார்கள். இதில் ராகுல் டிராவிட் பயிற்சி தர இளம் வீரர்கள் ருத்ராஜ் கெயிக்வாட், மணிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டார்கள். வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ள நிலையில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 குறித்த கேள்விகள் எழத்தொடங்கியுள்ளது. குறிப்பாக அதிரடி வீரர் ஹர்த்திக் பாண்ட்யா அணியில் இடம்பெறுவாரா இல்லையா என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.இதற்கு காரணம் பாண்ட்யாவின் பந்துவீச்சாக தான் இருக்க முடியும். கடந்த 2019ம் ஆண்டு காயத்தால் பாதிக்கப்பட்ட பாண்ட்யா அறுவை சிகிச்சைக்கு பிறகு பந்துவீச்சில் ஈடுபட மலேயே இருந்து வந்தார். ஐபிஎல் தொடரில் ஒரு ஓவரில் கூட விளையாடவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் சில ஓவர்களையே அவர் விளையாடினார். அவரால் பந்துவீச்சில் ஈடுபட முடியவில்லை என்ற காரணத்திற்காகவே இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது.வரவிருக்கும் இலங்கை தொடர், இந்திய அணியில் அவருக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்நிலையில் அவர் பழைய மாதிரியே மீண்டும் சிறப்பாக பந்துவீசுவதாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்திருக்கிறார். ஆஸ்திரேலிய தொடர், ஐபிஎல் தொடர்களில் பந்துவீச்சில் ஈடுபடவில்லை என்றாலும்,  இங்கிலாந்து தொடரில் பாண்ட்யா சிறப்பாக பந்துவீசியிருக்கிறார். தற்போது இண்ட்ரா ஸ்குவாட் போட்டியில் மிகச்சிறப்பாக வீசி கிறார். ஆனால் இந்திய அணி நிர்வாகம் தான் அவரின் ஃபார்ம் குறித்து முடிவெடுக்க வேண்டுமெனவும். ஆனால் என்னைப்பொறுத்தவரை அவரிடம் நல்ல நம்பிக்கையும், முன்னேற்றமும் தெரிகிறது எனக் கூறியிருக்கிறார்.டி20 உலகக்கோப்பை தொடைரில் தேர்வாவதற்கு இலங்கை தொடர் தான் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு இருக்கும் முக்கிய வாய்ப்பாக அமையும். எனவே தனது இடத்தை விட்டுக்கொடுத்துவிட கூடாது என்பதற்காக நிச்சயம் தனது சிறந்த முயற்ச்சியை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. WTC-ல் ஏற்ப்பட்ட கலங்கத்தைப் போக்க இதுவே  ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. ரசிகர்களும் அவரின் பழைய ஆட்டத்தை காண காத்துள்ளனர்.

Be the first to comment on "பாண்ட்யாவின் பயிற்சியாட்டம் குறித்து சூர்யகுமார் கூறிய தகவல்…"

Leave a comment

Your email address will not be published.


*