பாகிஸ்தானுக்கு எதிரான பெரும் அழுத்தத்தின் கீழ் அமைதியாக இருந்த அஸ்வினுக்கு விராட் கோலி பாராட்டு தெரிவித்தார்.

www.indcricketnews.com-indian-cricket-news-100227
MELBOURNE, AUSTRALIA - OCTOBER 23: Virat Kohli and Ravichandran Ashwin of India celebrate victory during the ICC Men's T20 World Cup match between India and Pakistan at Melbourne Cricket Ground on October 23, 2022 in Melbourne, Australia. (Photo by Daniel Pockett-ICC/ICC via Getty Images)

மெல்போர்ன்: கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று(அக்:23) நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது அபாரமான ஆட்டத்தால் 82(53) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்திலிருந்து அணிக்கு மறக்கமுடியாத வெற்றியை தேடிதந்தார்.

குறிப்பாக முகமது நவாஸ் வீசிய கடைசி ஓவரின் முதல்பந்தை எதிர்கொண்ட ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்க, 2வது பந்தில் தினேஷ் கார்த்திக் ஒரு ரன் எடுத்தார். தொடர்ந்து 3வது பந்தில் கோஹ்லி 2 ரன்கள் எடுக்க, இடுப்புக்கு மேல் ஃபுல்டாஸாக வந்த 4வது பந்தை சிக்ஸருக்கு விரட்டினார். இதனால் கூடுதலான நோ பாலுடன் அடுத்தபந்து ஃப்ரி ஹிட்டாக அமைந்தது. ஆனால் அடுத்த பந்தும் வொய்டாக அமைய ஃப்ரி ஹிட் தொடர்ந்து இருந்தது.

ஆனால் கோஹ்லி எதிர்கொண்ட 4வது பந்து ஸ்டெம்பில் பட்டாலும் ஃப்ரி ஹிட் என்பதால் 3 ரன்களை ஓடி எடுக்க, 5வது பந்தை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் அவுட்டானர். இறுதியில் ஒரு பந்தில் 2 ரன்கள் எடுக்கவேண்டும் என்பதால் போட்டி பரபரப்பின் உச்சத்திற்கே சென்றது. ஆனால் அப்போது களத்துக்கு வந்த ரவிச்சந்திர அஸ்வின், நவாஸ் வீசப்போகும் பந்து வொய்டாக தான் வரப்போகிறது என்பதை அறிந்து அதனை அடிக்காமல் நின்றதால் ரன்கள் சமநிலையானது.

ஆனால் எந்தவொரு நெருக்கடியும் இல்லாமல் அஸ்வின் கடைசி பந்தை அசால்டாக தூக்கி பவுண்டரிக்கு விரட்டியதால், இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது. இதில் அஸ்வினின் புத்திசாலித்தனத்தால் தான் இந்தியா வெற்றிபெற்றது என்று பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் போட்டிக்குப்பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் பேசிய கோஹ்லி, பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி ஓவரின் போது சிக்கலான சூழ்நிலையில் அஸ்வின் தைரியமாக இருந்ததற்காக பாராட்டு தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து பேசிய அவர், “போட்டியில் வெற்றிபெற 16 ரன்கள் தேவை என்ற நிலையில், ஒரு ஓவரில் ஒரு பந்துக்கு 2 ரன்கள் அடித்துவிடலாம் என்று ரசிகர்கள் நினைத்து கொள்வார்கள். ஆனால் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தவுடன் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதனால் நான் அஸ்வின் களத்திற்கு வந்தவுடன், இனிவரும் பந்தை கவர் திசையில் நோக்கி அடியுங்கள் என்று கூறினேன். ஏனெனில் ஃபில்டர்களுக்கு இடையில் இருக்கும் இடத்தை நோக்கி பந்தை அடித்தால், ஒரு ரன் ஓடி போட்டியை வென்றுவிடுவோம் என்று நினைத்தேன். ஆனால் நவாஸ் வீசவிருக்கும் பந்து ஓயிடாக தான் வரும் என்று கணித்து, பந்தை அடிக்காமல் நின்றார்.

ஒரு நெருக்கடியான தருணத்தில் அவர் கூலாக நின்றது உண்மையில் தைரியமான விஷயம். இருப்பினும் கடைசிபந்தை கவரில் அடிப்பார் என எதிர்பார்த்தேன். ஆனால் அவர் நேராக சர்கிளுக்கு வெளியே தூக்கியடித்தார். அஸ்வின் மூளைக்கு மேல் ஒரு மூளையை கூடுதலாக வைத்து செயல்படுகிறார் என்று நினைக்கிறேன்.” இவ்வாறு கோஹ்லி செய்தியாளர்களிடம் பேசினார்.

Be the first to comment on "பாகிஸ்தானுக்கு எதிரான பெரும் அழுத்தத்தின் கீழ் அமைதியாக இருந்த அஸ்வினுக்கு விராட் கோலி பாராட்டு தெரிவித்தார்."

Leave a comment

Your email address will not be published.


*