பயிற்சி ஆட்டத்தில் கே.எல்.ராகுலின் மிரட்டல் சதம்…

லண்டன்: இங்கிலாந்தின் கவுண்டி அணிக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுல் அடித்த சதம், இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் குழப்பத்தை உருவாக்கியுள்ளது.  டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை தொடர்ந்து, இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட விருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் செப்டம்பர் 14-ம் தேதி வரை நடக்கும், முக்கியமான போட்டிகளுக்கு முன்னதாக இந்திய அணி பயிற்சி போட்டிகளில் ஈடுபடும். ஆனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக முதல் தர பயிற்சி போட்டியில் விளையாடாததே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. எனவே இங்கிலாந்து டெஸ்ட் தொடர்க்கு முன்னதாக அந்நாட்டின் கவுண்டி அணிகளுடன் பயிற்சி போட்டிகளுக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்துக்கொடுத்தனர். அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான பயிற்சி ஆட்டம்  தொடங்கியது. மொத்தம் 3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகள் துர்ஹாம் நகரத்தில் உள்ள எமிரெட்ஸ் ரிவர்சைட் மைதானத்தில் விளையாடப்பட்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய விரும்பியது. விராட் கோலி, அஜிங்கிய ரஹானே ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால், ரோஹித் ஷர்மா கேப்டனாக பொறுப்பேற்றார். அணியின் ஓப்பனிங் வீரர்களாக களமிறங்கிய ரோஹித் (9) ரன்களும், மயங்க் அகர்வால் (28) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய புஜாரா (21) ரன்களும், ஹனுமா விஹாரி (24) ரன்களும் எடுத்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவிக்கத் தொடங்கினர். சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் சதம் அடித்து விளாசினார். 150  பந்துகளை சந்தித்த அவர், 101 ரன்கள் சேர்த்து, ரிட்டையர்ட் அவுட் ஆக்கப்பட்டார். மறுபுறம் தொடர்ந்து விளையாடிய ஜடேஜா 75 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதன்பின்னர் வந்த ஷர்தூல் தாகூர், அக்சர் ஆகியோர் சிறப்பாக ஆடவில்லை. தற்போது பும்ரா (3) ரன்களும், சிராஜ் (1) ரன்னும் எடுத்து களத்தில் இருக்கின்றனர். இறுதியில் முதல்நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 306/9 ரன்கள் சேர்த்துள்ளது. தற்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். இவர் இங்கிலாந்து டெஸ்டுக்குள் திரும்பாவிட்டால், கே.எல்.ராகுல் தான் நிச்சயம் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்பதுக்கு வாய்ப்பு உள்ளது. ஒருவேளை பண்ட் திரும்பிவந்தாலும் சீனியர் வீரர் புஜாராவுக்கு பதிலாக ராகுல் களமிறக்கப்படலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது.

Be the first to comment on "பயிற்சி ஆட்டத்தில் கே.எல்.ராகுலின் மிரட்டல் சதம்…"

Leave a comment

Your email address will not be published.


*