பகலிரவு டெஸ்ட்; இந்திய டீமுக்கு அச்சுறுத்தல்…மீண்டும் எச்சரிக்கும் சச்சின்!

ஆஸ்திரேலிய தரப்பில் இருந்த வெற்றிடம் தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது. இதனால், இந்திய அணிக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம், பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்குக் காத்திருக்கும் சாவல்கள் குறித்து சச்சின் பேசினார்.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் பகலிரவு டெஸ்ட் வருகிற 17ஆம் தேதி துவங்குகிறது. இப்போட்டியில் இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால்கள் குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் விளக்கினார்.

கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2-1 என பார்டர்-கவாஸ்கர் டிராபியை கைப்பற்றி வரலாற்றுச் சதானைப் படைத்தது. இம்முறையும் சாதனைப் பயணத்தைத் தொடர இந்திய அணி தீவிர பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தனியார் பத்திரிகையிடம், பகலிரவு டெஸ்ட் குறித்துப் பேசிய சச்சின் சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். “கடந்த முறை ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லபுஷேன் போன்றவர்கள் இல்லை. தற்போதைய தொடரில் அவர்கள் இடம்பெற்றுள்ளதால், ஆஸ்திரேலிய தரப்பில் இருந்த வெற்றிடம் தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது. இதனால், இந்திய அணிக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்” எனத் தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணியில், ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் போட்டியின்போது பந்தைச் சேதப்படுத்தியதாகப் புகார் எழுந்தது. இதன்காரணமாக, இருவருக்கும் ஓராண்டு கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டதால், 2019ஆம் ஆண்டு பார்டர்-கவாஸ்கர் டிராபில் இருவரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பேசிய சச்சின், இந்திய பௌலர்கள் உலகத் தரத்துடன் பந்துவீசி வருகிறார்கள் எனப் புகழ்ந்தார். “பௌலர்கள் பிரிவில் நமக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. எப்பேர்ப்பட்ட மைதானங்களில் அவர்களால் சிறப்பாகப் பந்துவீச முடியும். ஸ்வீங், வேகம் குறைந்த பந்துகளை வீசும் வல்லவர்கள் நம்மிடம் உள்ளனர். ஸ்பின்னர்களும் உலகத் தரத்துடன் உள்ளனர்” எனத் தெரிவித்தார்.

முதல் டெஸ்ட் (பகலிரவு) முடிந்தவுடன் விராட் கோலி, தனது மனைவியின் பிரசவத்தின்போது அருகில் இருப்பதற்காக நாடு திரும்புகிறார். இதனால், எஞ்சிய மூன்று டெஸ்ட்களில் அஜிங்கிய ரஹானே கேப்டனாக செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் தற்போது இந்தியாவுக்கு முழுமையான பந்துவீச்சு தாக்குதல் இருப்பதாக சச்சின் கருதுகிறார். எனவே, அணி எந்த வகையான மேற்பரப்பில் விளையாடுகிறது என்பது பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படக்கூடாது, ஏனெனில் பந்தை ஆட்டக்கூடிய பந்து வீச்சாளர்கள் மற்றும் மாறுபாட்டை வீசக்கூடிய தனிநபர்கள் இருப்பதால் நீங்கள் எல்லா பக்கங்களையும் உள்ளடக்கியிருக்கிறீர்கள்.

சில நாட்களுக்குமுன் பேட்டிகொடுத்த சச்சின், விராட் கோலி இடம் காலியாவது குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "பகலிரவு டெஸ்ட்; இந்திய டீமுக்கு அச்சுறுத்தல்…மீண்டும் எச்சரிக்கும் சச்சின்!"

Leave a comment

Your email address will not be published.