நெதர்லாந்தை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

www.indcricketnews.com-indian-cricket-news-100251
India crushed the Netherlands by 56 runs to claim the top of the points table India thrashed the Netherlands by 56 runs to register its second consecutive win in the T20 World Cup. With this big win, Men in blue claimed the top of the points table and got a valuable boost to their net run rate. Indian bowlers produced a clinical performance to defend 180 against the Orange Brigade. The Dutchmen were never in the contest and managed to score 123/9 in 20 overs. Electing to bat first on a slower surface, India produced a solid batting display with Rohit Sharma (53), Virat Kohli (62*), and Suryakumar Yadav (51*), all scoring scintillating fifties. Indian opener KL Rahul (9) yet again failed to fire at the top.

சிட்னி: ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் டி20 உலகக் கோப்பை தொடரில் க்ரூப் 2-ல் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அபாரமாக விளையாடி த்ரில் வெற்றிபெற்றது. இதனைத்தொடர்ந்து இந்தியா-நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று சிட்னியில் நடைபெற்றது.

ஏற்கனவே அதே ஆடுகளத்தில் தென்னாப்பிரிக்கா-வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றதால், பேட்டிற்கு பந்து சரிவர வரவில்லை. எனவே இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு நெருக்கடி அதிகரிக்கும் என்பதால் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய தொடக்க வீரரான கே.எல்.ராகுல் 9(12) ரன்களுடன் மீகரின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். 

ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த தொடக்க வீரரான கேப்டன் ரோஹித் ஷர்மா-விராட் கோலி இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய ரோஹித் ஷர்மா அரைசதம் கடந்த நிலையில், 53(39) ரன்களுடன் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

ஆனால் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கோஹ்லி மீண்டும் அரைசதம் கடந்து அசத்த, அவருக்கு உறுதுணையாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் தனது பங்கிற்கு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 25 பந்துகளில் தனது முதல் டி20 உலகக்கோப்பை அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டு இழப்பிற்கு 179 ரன்களை குவித்தது. இதில் கோஹ்லி 62(44) ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 51(35) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர்.

இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய நெதர்லாந்து அணியின் தொடக்க வீரரான விக்ரம்ஜித் சிங் வெறும் 1(9) ரன்னுடன் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த தொடக்க வீரரான மேக்ஸ் ஓடவுட் மற்றும் பாஸ் டி லீட் ஆகியோர் தலா 16 ரன்களுடன் அக்ஸர் படேல் பந்துவீச்சில் வெளியேறினர்.

அதன்பின்னர் களமிறங்கிய அதிரடி வீரர்களான காலின் அக்கர்மேன் 17(21) ,டாம் கூப்பர் 9(12) ஆகியோர் அஸ்வினின் மாயஜால சுழலில் சிக்கி ஒரே ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். இறுதியாக களமிறங்கிய வீரர்களும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதில் இந்திய அணி தரப்பில்  ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன்மூலம் 56 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி அபார வெற்றிபெற்றதுடன், இந்த சீசனில் தனது இரண்டாவது வெற்றியை பதிவுசெய்து புள்ளி பட்டியலில் முதல்இடத்தை பிடித்தது.

Be the first to comment on "நெதர்லாந்தை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது."

Leave a comment

Your email address will not be published.


*