நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 சுற்று மோதலில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்குமாறு சுனில் கவாஸ்கர் பரிந்துரைத்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-100242

சிட்னி :கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று(அக்:23) நடந்துமுடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 சுற்றில் இந்தியா கடைசி ஓவரில் த்ரில் வெற்றிபெற்ற நிலையில், இன்று சிட்னியில் நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஆனால் டி20 கிரிக்கெட்டில் இதுவரை நெதர்லாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது கிடையாது.

 அதனால் நெதர்லாந்து அணி வீரர்கள் எவ்வாறு செயல்படுவார்கள் என்பது குறித்து இந்திய வீரர்களுக்கு தெரியாதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது போல் தெரிகிறது. எனவே அவருக்கு ஓய்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாருக்கும் ஓய்வு வழங்கும் திட்டம் இல்லை என்று இந்திய அணியின் பந்துவீச்சுபயிற்சியாளர் பராஸ் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஹர்திக் பாண்டியாவுக்கு லேசான காயம் இருந்தாலும் கூட, அவரை நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட வைக்க கூடாது. ஏனெனில் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (அக்:30) இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முக்கிய ஆட்டம் ஒன்று இருக்கிறது.

இந்தியாவுக்கு அது பெரிய போட்டி என்பதால் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்களுக்கு ஓய்வு வழங்கினால் அவர்களுக்கு ரெஸ்ட் கிடைக்கும். அதேசமயம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் புத்துணர்ச்சியுடன் தயாராவார்கள். ஆனால் டி20 கிரிக்கெட்டில் எந்தவொரு அணியயையும் நீங்கள் சாதாரணமாக எண்ணி விட முடியாது. நெதர்லாந்து அணியை கூட குறைத்து மதிப்பிடக்கூடாது. எதிரணிக்கு ஏற்ப இந்திய வீரர்களின் தேர்வு அமைய வேண்டும். அதனால் நீண்டநாள் கிரிக்கெட் விளையாடாமல் ஓய்விலிருந்த முகமது ஷமி தொடர்ந்து பந்துவீசி பயிற்சியில் ஈடுபடவேண்டும்”என்று கவாஸ்கர் தெரிவித்தார்.

மேலும்,”ஹர்திக் பாண்டியா இல்லையென்றால் கூட தினேஷ் கார்த்திக்கை 5வது இடத்தில் களமிறக்கலாம். ஆனால் ஆரம்ப விக்கெட்டுகள் சரிந்தால், பேட்டிங்கில் குறைவு ஏற்படுவது கொஞ்சம் கவலையாக இருக்கலாம். ஆகையால் இளம் வீரர் தீபக் ஹூடாவை நெதர்லாந்துக்கு எதிரான பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும். ஏனெனில் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு ஓவர்களையும் அவரால் கவனித்துக்கொள்ள முடியும் என்பதால் 5வது வீரராக களமிறங்கி பேட்டிங் செய்யட்டும். இதில் ஹூடாவே தனது முழு ஓவர்களையும் வீச வேண்டியதில்லை, மீதமுள்ள ஓவர்களை அக்ஸர் படேல் வீசுவார்.

ஆனால் அக்ஸர் படேல் பாகிஸ்தானுக்கு எதிராக பந்துவீச்சில் சொதப்பியது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக நெதர்லாந்துக்கு எதிரான போட்டியே அவருக்கு கடைசி வாய்ப்பாக அமையும் என கருதப்படுகிறது. ஏனெனில் இந்திய ஆடுகளத்தில் சிறப்பாக செயல்பட்ட அக்ஸர், ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் தொடர்ந்து ஏமாற்றிவருகிறார். இதனால் அக்ஸர் படேலை களமிறக்கலாமா அல்லது சாஹலை இந்திய அணியில் சேர்க்கலாமா என்ற குழப்பத்தில் ராகுல் டிராவிட் இருக்கிறார். அதேசமயம் மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் ஹர்சல் பட்டேலும், தனது இடத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.” இவ்வாறு கவாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Be the first to comment on "நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 சுற்று மோதலில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்குமாறு சுனில் கவாஸ்கர் பரிந்துரைத்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*