நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி-20 போட்டியில் இந்திய அணி மீண்டும் சூப்பர் ஓவரில் வெற்றி

இந்திய அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் மூன்று டி-20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-0 என முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் நான்காவது டி-20 போட்டி வெலிங்டனில் இன்று நடந்தது.

ரோஹித்துக்கு ஓய்வு

இதில் காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் இப்போட்டியில் இருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக டிம் சவுத்தி கேப்டனாக களமிறங்கினார். நியூசிலாந்து கோலின் கிராண்ட்ஹோமுக்கு பதிலாக புரூஸ் இடம் பிடித்தார். கேன் வில்லியம்சனுக்கு பதிலாக மிட்சல் சேர்க்கப்பட்டார்.

இந்திய அணியில் ஷர்மாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டு சாம்சன் துவக்க வீரராக களமிறங்கினார். இதே போல ஷமி, ஜடேஜாவுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சாய்னி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.

மனீஷ் பாண்டே ஆறுதல்

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ராகுல் (39), தாகூர் (20) , மனீஷ் பாண்டே (50*) ஆகியோர் கைகொடுக்க இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது.

ரட்டல் அடி முன்ரோ

எட்டக்கூடிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு துவக்க வீரர் கப்டில் (4) சொதப்பலாக வெளியேறினார். மற்றொரு துவக்க வீரர் கோலின் முன்ரோ (64) அரைசதம் அடித்து வெளியேறினார். அடுத்து வந்த டாம் புரூஸ் டக் அவுட்டானார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டாம் செய்பர்ட் அரைசதம் கடந்தார். இவருக்கு டெய்லர் நல்ல கம்பெனி கொடுக்க நியூசிலாந்து அணியின் ரன் வேகம் மின்னல் வேகத்தில் உயர்ந்தது.

இதையடுத்து நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து போட்டியை டை செய்தது. இதையடுத்து நியூசிலாந்து அணி சூப்பர் ஒவரில் 1 விக்கெட்டுக்கு 13 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ராகுல் முதல் இரண்டு பந்தில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்து அவுட்டானார். அடுத்த பந்தில் கோலி 2 ரன், பவுண்டரி அடிக்க, இந்திய அணி மீண்டும் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 4-0 என முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் கடைசி டி-20 போட்டி நாளை மறுநாள் மவுண்ட் மாங்கானியில் நடக்கிறது.

Be the first to comment on "நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி-20 போட்டியில் இந்திய அணி மீண்டும் சூப்பர் ஓவரில் வெற்றி"

Leave a comment

Your email address will not be published.


*