நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள 18 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

www.indcricketnews.com-indian-cricket-news-034

மும்பை:  இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கிலும், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.இதையடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி,அந்நாட்டுக்கு சென்று 3 டெஸ்ட் தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் வரும் டிசம்பர் 26ஆம் தேதி முதல் விளையாட உள்ளது.

இந்நிலையில், தென்னாப்பிரிக்கவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள 18 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ நேற்று வெளியிட்டுள்ளது.மேலும், அணியை வழிநடத்த டெஸ்ட் தொடரின் கேப்டனாக விராட் கோலி மற்றும் துணைக் கேப்டனாக ரோகித் சர்மாவையும் பிசிசிஐ நியமித்துள்ளது.

இதில், தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா,  மயங்க் அகர்வால் இடம்பிடித்துள்ளனர். மேலும், காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் கலந்துகொள்ளாத கே.எல்.ராகுலும் காயத்திலிருந்து மீண்டு அணியில் இணைந்துள்ளார்.

மேலும்,கடந்த இங்கிலாந்து தொடரிலிருந்து ஃபார்மில் இல்லாமல் தடுமாறினாலும் கடந்த சுற்றுப்பயணத்தில் தென்னாப்பிரிக்காவில் சிறப்பாக விளையாடியதால் ரஹானேவிடமிருந்து துணைக்கேப்டன் பதவி பறிக்கப்பட்டு அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதில்,மற்றொரு சீனியர் வீரரான புஜாராவும் இடம்பெற்றுள்ளார்.

மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடும் ஸ்ரேயாஸ் ஐயர், தென்னாப்பிரிக்கா ஏ தொடரில் கலக்கிய ஹனுமா விஹாரி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பர்களில், ரிஷப் பண்ட் மற்றும் விருதிமான் சாஹா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆல்ரவுண்டர்களில்,  வலது முழங்கையின் காயம் காரணமாக ஜடேஜா விலகியுள்ளார்.

Be the first to comment on "நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள 18 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது."

Leave a comment

Your email address will not be published.


*