நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் தொடரை 1-0 என கைபற்றி ,மெகா வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

www.indcricketnews.com-indian-cricket-news-025

மும்பை: இந்தியா- நியூசிலாந்துக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கான்பூரில் நடைபெற்ற முதல்போட்டி டிராவில் முடிவடைந்தது. இதைதொடர்ந்து, கடந்த டிசம்பர் 3ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணி. இப்போட்டியின், முதல் இன்னிங்ஸ் முடிவில் 109.5 ஓவருக்கு 10 விக்கெட்டுகளை இழந்து 325 ரன்களை குவித்தது. இதில், நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் மட்டுமே 10 விக்கெட்களையும் கைப்பற்றி உலகசாதனை படைத்தார்.

அடுத்துக் களமிறங்கிய நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 28.1 ஓவருக்கு 10 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் மட்டுமே எடுத்தது. மேலும், இந்த இன்னிங்ஸ் முடிவில் இந்தியா 263 ரன்களுடன் முன்னிலை வகித்தது. இந்நிலையில், நியூசிலாந்துக்கு பால்-ஆன் கொடுக்காமல் தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 70வது ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 276 ரன்கள் குவித்து 539 ரன்களுக்கு டிக்ளேர் அறிவித்தது.

இரண்டாவது இன்னிங்சிலும், அஜாஸ் படேல் 4/106 விக்கெட்களை கைப்பற்றினார். இதன்மூலம், ஒரே போட்டியில் 14 விக்கெட்களை கைப்பற்றியவர் என பெருமைக்குரியவர். இதற்குமுன், 1980-ல் இந்தியாவுக்கு எதிராக இயான்போதம் 13 விக்கெட்களை எடுத்ததே சாதனையாக இருந்தது. மேலும், டெஸ்ட்தொடரில் இந்தியா நிர்ணயித்த மெகா இலக்கை துரத்திக்கொண்டு 7 செஷன்களில் 540 ரன்களை எடுத்தே ஆகவேண்டும் என முனைப்புடன் களமிறங்கிய நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரரான டாம் லதாம் 6 (15) ரன்கள் எடுத்து அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதைதொடர்ந்து வில் யங் 4 பவுண்டரி உட்பட 20 (41) ரன்களும், ரோஸ் டெய்லர் 6 (8) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய டேரில் மிட்செல்-ஹென்ரி நிகோல்ஸ் ஜோடியில்  மிட்செல் 7 பவுண்டரி 2 சிக்ஸர் உட்பட 60 (92) ரன்கள் அடித்து, அக்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்த நிலையில் டாம் பிளென்டெலும் 0 (6) ரன் அவுட் ஆனார்.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய ரவிந்திரா 4 பவுண்டரி உட்பட 18(50) , ஜேமிசன் 0(4), டாம் சௌதீ 0(2), சோமர்வில்லே 1(7) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.இறுதியில், ஹென்ட்ரி நிகோல்ஸ் 8 பவுண்டரி உட்பட 44 (111) ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதனால், நியூசிலாந்து அணி 56.3 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் எடுத்து, 372 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்தது. ஆனால், இந்தியாவுக்கு இதுதான் மெகப்பெரிய வெற்றியாகும்.

நியூசிலாந்து இதுவரை இந்திய மண்ணில் மொத்தம் 2 டெஸ்ட்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக 1988-ல் நடைபெற்ற  டெஸ்ட்போட்டியில்  தனது கடைசி வெற்றியைப் பதிவுசெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் தொடரை 1-0 என கைபற்றி ,மெகா வெற்றியைப் பதிவு செய்துள்ளது."

Leave a comment

Your email address will not be published.


*