நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் நாள் முதல் போட்டியில் சுப்மன் கில் மற்றும் அறிமுக வீரர் ஷ்ரேயாஸ் ஐயரும் பிரகாசமான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.

www.indcricketnews.com-indian-cricket-news-0098

இந்தியா – நியூசிலாந்துக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கான்பூரிலுள்ள க்ரீன் பார்க்கில் இன்று துவங்கியுள்ளது. இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து தொடக்க ஆட்டக்காரர்களான மயங்க் அகர்வால்- சுப்மன் கில் ஜோடியுடன் களமிறங்கியது. குறைவான ரன்களே எடுத்திருந்த நிலையில் 7.5வது  ஓவரிலேயே மயங்க் அகர்வால் 2 பவுண்டரி உட்பட 13 (28) ரன்களுடன் கைல் ஜேமிசன் வீசியபந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக புஜாரா- கில்லுடன் பார்ட்னர்ஷிப் மேற்கொண்டு சிறப்பாக விளையாடி முதல்நாள் முதல் செஷன் முடிவில் சுப்மன் கில் 52 (87), புஜாரா 15 (61) ரன்கள் என மொத்தம் 82/1 ரன்கள் எடுத்துள்ளனர். இரண்டாவது செஷனின் முதல் ஓவரிலேயே அதாவது 29.6வது ஓவரில் ஜேமிசன் வீசிய பந்தில் 5 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட 52 (93) ரன்களுடன் சுப்மன்கில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக கேப்டன் ரஹானே புஜாராவுடன் பார்ட்னர்ஷிப் மேற்கொண்டார்.  இதில்அணியின் ஸ்பின்னர்கள் , வேகப்பந்து வீச்சாளர்கள் என  மாறிமாறி பந்துவீச வைத்தார் நியூசிலாந்து கேப்டன். இதனால், 33ஆவது ஓவரில், ஜேமிசன் வீசிய பந்தில் புஜாராவின் கையில்பட்டு, சிறிய ரத்தக்கசிவு ஏற்பட்டது. எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விளையாடத் துவங்கினார். இறுதியில்  37.4வது ஓவரில் டிம் சௌதீயின் பந்துவீச்சில்  புஜாரா 2 பவுண்டரி உட்பட 26 (88) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

 பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்ற வெறியுடன் இருந்த ரஹானே  49.2வது ஓவரில் ஷாட் ஆட முற்பட்டு பந்து பேட்டில் எட்ஜ் ஆகி ஸ்டம்பில் பட்டது.  இதில் 6 பவுண்டரி உட்பட 35(63) ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். சீனியர் வீரர்கள் ஏமாற்றியதால் ஸ்ரேயாஸ் ஐயர் 5வது வீரராக  ஜடேஜாவுடன் சேர்ந்து சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தினார். மேலும் இரண்டாவது செஷன் முடிவில் 154/4 ரன்கள் சேர்த்திருந்தது.

இதில் ஷர்ரேயாஸ் ஐயர் 17 (55), ரவீந்திர ஜடேஜா 6 (13) ஆகியோர் களத்தில் இருந்தனர். மூன்றாவது செஷனில்  நியூசிலாந்து கேப்டன் வேகப்பந்து , சுழற்பந்து என மாறி மாறி வீசியும் ஷ்ரேயாஸ்-ஜடேஜா பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியவில்லை. ஸ்டெம்பிற்கு அருகில் வரும் பந்துகளைகூட ஷர்யேஸ் அழகாக கட் செய்து பவுண்டரி அடித்து, பார்மை வெளிப்படுத்தினார். இதனால்,  ரன் ரேட் ஏற்றம் காண துவங்கியது.

இறுதியில் டெஸ்ட் தொடரின் முதல்நாள் போட்டி 258/4 ரன்களுடன் முடிவுக்கு வந்துளளது. ஷ்ரேயஸ் ஐயர் 7 பவுண்டரி 2 சிக்ஸர் உட்பட 75 (136), ரவீந்திர ஜடேஜா 6 பவுண்டரி உட்பட 50 (100) ரன்களுடன் களத்தில் இருக்கிறார்கள். நாளை இரண்டாவது நாள் போட்டி நடைபெறும்.

Be the first to comment on "நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் நாள் முதல் போட்டியில் சுப்மன் கில் மற்றும் அறிமுக வீரர் ஷ்ரேயாஸ் ஐயரும் பிரகாசமான ஆட்டத்தை வெளிபடுத்தினர்."

Leave a comment

Your email address will not be published.


*