நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல்க்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் களமிறங்கவுள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-0086

மும்பை: இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி  இந்திய அணிக்கு எதிராக  டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில்  கலந்து கொண்டு விளையாடி வருகின்றது.

இதில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில்  இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. மேலும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் தொடரின் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா அடைந்த தோல்வியை சரி செய்யும் உத்வேகத்துடன் இந்திய அணி வீரர்கள் உள்ளனர்.

விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா உள்ளிட்ட பிரதான வீரர்களுக்கு டி20 உலக்கோப்பையை தொடர்ந்து ஓய்வு அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு  வீரர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளது பெறும் பின்னடைவாக கருதப்படுகிறது.

 டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி  இந்திய அணிக்கு நல்லதொரு தொடக்கத்தை அளித்து, டெஸ்ட் அணியில் நிரந்திரமான இடத்தை பிடித்த தொடக்க வீரர் மற்றும் விக்கெட் கீப்பரான கே.எல்.ராகுல். ஐ.பி.எல், டி-20 என தொடர்ந்து விளையாடியதால் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான  டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளளார். மேலும்  பெங்களூரிலுள்ள என்.சி.ஏ. மையத்திற்கு முழு உடல் தகுதி பெறுவதுக்கு வரவுள்ளார்.

பி.சி.சி.ஐ இது குறித்து கூறுகையில், ராகுல்க்கு இடது தொடையில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக விலகியுள்ளதை தொடர்ந்து இந்திய அணியின் இளம் வீரர் சூர்யகுமார் யாதவ்க்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஐ.பி.எல்லில் மும்பை அணிக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ் சராசரியாக 56 ரன்களை உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் அடித்துள்ளார். கடந்த 2019-2020 ஆண்டில் ரஞ்சி சீசனில் மட்டும்  508 ரன்களை குவித்துள்ளார்.

சூர்யகுமார் யாதவுக்கு லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் இத்தொடர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியாக அமையும்.  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அணியில் நிரந்தர இடத்தையும் பிடிக்கலாம்.

 கான்பூரில் முதல் டெஸ்ட் போட்டியும், மும்பையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் கோலி இல்லாத காரணத்தால் ரஹானே வழி நடத்துகிறார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்சே பட்டியலில் மாயங் அகர்வால், சுப்மான் கில், புஜாரா, ரஹானே, சூர்யகுமார் யாதவ், விதர்மன் சாஹா ஜடேஜா அஸ்வின், அக்சர் பட்டேல், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.

மேலும் டெஸ்ட் போட்டிகளுக்காவே தன்னை தயார்படுத்தி கொண்டுள்ள விஹாரிக்கு இந்திய அணியில் இடம் அளிக்கப்படவில்லை. இது தொடர்பாக சர்ச்சை எழுந்த போது, விஹாரியை அவசர அவசரமாக தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய ஏ அணியில் தேர்வுக் குழுவினர் தேர்வு செய்தனர்.

Be the first to comment on "நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல்க்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் களமிறங்கவுள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*